மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 45 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரத்து 400 கன அடியாக உயர்ந்துள்ளது. 16 கண் மதகு வழியாக 27 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு  மற்றும் மேற்கு கால்வாயில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முன்னதாக குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் பாசனத்திற்காக நீர் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து  பெய்து வரும் கன மழையின் காரணமாக  ஒகேனக்கல் ஆற்றல் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்து தற்போது, நீர் வரத்து, விநாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒகேனக்கலில் நீர்வரத்து நேற்று (26.07.2025) 32 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று (27.06.2025) 50 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.