பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் 'வாட்டர்  பெல் நேரம்' என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில்  கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், 'மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்து தண்ணீர் பாட்டில் கொண்டு வர வேண்டு. காலை பிரார்த்தனையின் பொழுது தண்ணீர் குடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டும். காலை 11 மணி, மதியம் ஒரு மணி, பிற்பகல் 3 மணி என மூன்று நேரங்களில் பெல் அடிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்படும். அப்போது மாணவர்கள் நீர் அருந்த வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ளது.