'Watching a movie doesn't mean I don't care about people' - Kanimozhi interview Photograph: (dmk)
கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், ''திரும்பத் திரும்ப மொழி திணிப்பில் ஒன்றிய அரசாங்கமும் பிரதமரும் முனைப்பு காட்டி வருகிறார்கள். இது இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல. நிச்சயமாக நல்லதாக இருக்காது என்பதை உணர வேண்டும். நாட்டிற்கு எதிரான செயலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த மொழியை யார் எப்பொழுது பயன்படுத்தினாலும் தற்காலத்திலே மக்கள் எதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக முக்கியம். மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில், ஒரு மொழி பேசக்கூடிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தாத வகையில் அரசாங்கம் நடத்தப்பட வேண்டும் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் சிலர் 'நெல் கொள்முதல் விவகாரத்தில் வருகின்ற 29ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். எப்படி பார்க்கிறீர்கள்' என்ற கேள்விக்கு?, ''ஒன்றிய அரசாங்க கமிட்டி வந்திருக்கிறார்கள். அந்த கமிட்டியிடம் தொடர்ந்து நாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எனவே விவசாயிகள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஈரப்பதத்தை அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
சினிமா விமர்சகர் போல முதல்வர் மாறிவிட்டார் என எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள விமர்சனம் குறித்த கேள்விக்கு, ''மக்கள் பிரச்சனைகளை பார்க்காமல் இவ்வளவு நல்ல ஆட்சி நடத்த முடியாது. ஒருவர் படத்தை பார்ப்பதனாலேயே மக்களைப் பற்றி கவலை இல்லை என்பதல்ல. மக்களுடைய கவலைகளை, வாழ்க்கையை வெளிப்படுத்துவது தான் திரைப்படங்கள். எல்லா படங்களும் இல்லை என்றாலும் சில திரைப்படங்கள். அதனால் அதையும் பார்க்கக்கூடிய ஒரு இடத்தில் இருக்கக்கூடியவர்கள், கலைஞர்களையும் ஊக்குவிக்கக் கூடிய ஒருவர்தான் முதலமைச்சர். அதே நேரத்தில் மக்களுடைய எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஓடோடி சென்று நேரடியாக மக்களுக்கு ஆறுதல் சொல்லி பிரச்சனைகளை தீர்த்து வைக்கக்கூடிய முதலமைச்சராக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்'' என்றார்.
Follow Us