தூத்துக்குடி மாவட்டத்தின் தவெக நிர்வாகி அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அலுவலகம் முன்பு நேற்று தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில்  மாவட்டச் செயலாளர் சரியில்லை என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி பெண்கள் உட்பட தவெக தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Advertisment

தவெக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் கல்லாணை விஜயன்பன். இவருக்கு எதிராகத்தான் தவெக நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு வட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்குவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல் பணம் வசூலிப்பதாக அந்த பகுதி தவெகவினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும் பெண் தொண்டர்களை உருவ கேலி செய்வதாகவும் புகார்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மாவட்டச் செயலாளருக்கு எடுத்துச் சென்றால் 'எப்போது பார்த்தாலும் பிரச்சனையோடே வருகிறீர்கள்' என கேலி செய்வதாகவும், அமைச்சர் மூர்த்தியிடம் பணம் வாங்கிக்கொண்டு மக்கள் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் போராட்டம் நடத்தாமல் கைதுக்கு பயந்து பணியாற்றாமல் இருக்கிறார் என்றும் சொந்த கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

179
War flag in Kalankarai - Neelankarai tvk Panchayats continue! Photograph: (tvk)
Advertisment

போஸ்டர் அடித்தால் கூட அதில் என்னுடைய படம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கட்சிக்காரர்களின் மிரட்டி வருவதாகவும், மதம், ஜாதி ஆகியவற்றை பார்த்துதான் கட்சியில் பொறுப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் பாதைகளுடன் மாவட்டச் செயலாளர் விஜயன்பனுக்கு எதிரான இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பனையூர் கட்சி அலுவலகத்திற்கே நேரில் வந்து கண்ணீர் விட்டு அழுதும் தூத்துக்குடி அஜிதாவுக்கு பதவி கிடைக்கவில்லை. நேற்று தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் காலாங்கரையில் மா.செ வுக்கு எதிரான இந்த போராட்டம் நீலாங்கரைக்கு எட்டுமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.