wall collapses incident in sivakasi Photograph: (sivakasi)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பத்திரமாக இருக்க எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் பகுதியில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இந்நிலையில் சிவகாசி அருகே வீட்டின் முன் இருந்த மண் சுவர் இடிந்து விழுந்து நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள திருத்தங்கல் நகராட்சி பகுதி மேலரத வீதியில் வசித்து வந்தவர் பவானி (18 வயது). இவர் நர்சிங் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது கனமழை பொழிந்துள்ளது. அதில் வீட்டின் முன் பக்கத்தில் இருந்த மண் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாட்டில் சிக்கிய மாணவி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆசை ஆசையாக தீபாவளிக்கு வாங்கிய ஆடையைக் கூட அணியாமல் மகள் சென்று விட்டதாக மாணவியின் தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
Follow Us