மகாராஷ்டிராவில், மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இந்த சூழ்நிலையில் அம்மாநிலத்தில் மும்பை, நவிமும்பை, புனே, நாக்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு இன்று (15-01-26) தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 2,869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்கப்படும் இந்த தேர்தலில் போட்டியிட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என 15,931 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற தீவிர தேர்தல் பிரச்சாரம் முன்தினம் (13-01-26) வரை நடைபெற்ற நிலையில், 29 மாநகராட்சிகளுக்கு இன்று காலை 7:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இன்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்றபடி வாக்களித்து வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் நாளை (16-01-26) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.