கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரு  கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். இந்நிலையில் முதற் கட்ட வாக்குப்பதிவு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இன்று (09.12.2025) காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதில் 3 மாநகராட்சிகள்,  39 நகராட்சிகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 471 ஊராட்சிகளில் 11ஆயிரத்து 166 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 36 ஆயிரத்து 630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனையொட்டி தங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள்  காலையில் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வரிசையின் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் கேரள சட்டமன்ற காங்கிரச்குழுவின் தலைதலைவர் வி.டி. சதீசன் வாக்களித்தார்.

Advertisment

அதே போன்று திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறுகையில், “மக்களின் விருப்பப்படியும், நகரத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையிலும் ஆட்சி செய்ய, மாநகராட்சியை எங்களிடம் மக்கள்  ஒப்படைப்பார்கள். நாங்கள் அதற்கான பாதையில் சரிசெய்வோம். தற்போது ஆட்சி செய்பவர்கள் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்கு உறுதிகளும் செயல்படுத்தாததால் எங்கள் கட்சி மீது மக்களுக்கு ஒரு கவனம் இருக்கிறது.

இந்த முறை திருவனந்தபுரம் வழியாக கேரள மக்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவும்  நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.  கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ஜவஹர்நகர் ஜிஎல்பிஎஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்  வாக்களித்தார். 2ஆம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (11.12.20250 நடைபெற உள்ளது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 13ஆம் தேதி (13.12.2025) அறிவிக்கப்பட உள்ளது. 

Advertisment