Advertisment

'இனியும் நீங்கள் திமுகவிற்கு ஓட்டு போட்டால்... '-நாமக்கல்லில் விஜய் பரபரப்பு பேச்சு

a5246

'Voting for DMK is like voting for BJP' - Vijay's speech in Namakkal Photograph: (TVK)

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இன்று மூன்றாவது கட்டமாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லில் எல்லைப் பகுதியான எம்.களத்தூர் பகுதிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பிரச்சார பேருந்திற்கு மாறினார். அங்கிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.விஜய் வருகையை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

Advertisment

பரப்புரை செய்யும் இடத்திற்கு வந்த விஜய் மக்களிடம் பேசுகையில், ''இந்தியாவின் டிரான்ஸ்போர்ட் ஹப் நாமக்கல் மாவட்டம். லாரி பாடி கட்டும் தொழில் என இன்னும் நிறைய தொழில்கள் செய்கிற ஊரும் நம்ம நாமக்கல்  தான். அது மட்டுமல்ல நாமக்கல் மாவட்டம் தான் முட்டை உலகம். நாமக்கல் முட்டை ரொம்ப ஃபேமஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான முட்டை கொடுக்கிற ஊரு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் ஊரும் நாமக்கல் தான். இரண்டே இரண்டு வரிகள் சொன்னால் உங்களுக்கு ஈஸியா கனெக்ட் ஆகும். 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்றால் நாடி நரம்பு எல்லாம் ரத்தம் பாய்ச்சும் இந்த வரிகளை எழுதியது யார் தெரியும் அல்லவா? விஜயகாந்த் சார் சொன்னாரு ஆனால் விஜயகாந்திற்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்து இந்த வரிகளை நாமக்கல் கவிஞர் எழுதினார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய வரி அது. தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை வழங்கியதும் இதே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் ஒருத்தர் தான். சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன். அவருக்கு நாமக்கல்லில் அவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி நம்பர் 456 கொடுத்தது யாரு? சொன்னார்களே செய்தார்களா?

வடிவேல் சார் எம்டி பாக்கெட்டை எடுத்து ஒரு படத்தில் காட்டுவாரு. அதுமாதிரி வாக்குறுதியை படித்துவிட்டு பாக்கெட்டை எடுத்து காட்டுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்திற்காக அது செய்வோம் இது செய்வோம் என வாக்குறுதிகளாக சொன்னார்கள். அதில் ஒரு சின்ன லிஸ்ட் மட்டும் நாம பார்ப்போம். ஒவ்வொரு ஒன்றியத்திலும்  தனியா சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும், இவை உலர்க்கலன்களுடன் கூடிய  நிலையங்களுடன் இணைக்கப்படும் என்ற வாக்குறுதி நம்பர் 50. கொப்பரை தேங்காய் அரசே கொள்முதல் செய்யும். அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் வாக்குறுதி 66. நியாய விலை கடைகளில் நாட்டு சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் நம்பர் 68. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் வாக்குறுதி 152. எல்லாம் சொன்னார்கள் செய்தார்களா?

நாமக்கலில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகள் வீணாகாமல் பாதுகாப்பாக வைக்க முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்ற கோரிக்கை, பாக்டீரியா வைரலாஜிக்கல் பரிசோதனை மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கிறது. திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு. அதுதான் நாடறிந்த விஷயம் ஆச்சே. அதை நான் திருச்சியிலேயே பேசி இருந்தேன். நாமக்கல்லில் விசைத்தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களை குறி வைத்து அந்த கிட்னி திருட்டு நடந்திருக்கு என சொல்கிறார்கள். அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்ம ஆட்சி அமைந்த உடன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இந்த கிட்னி திருட்டுக்கு ஆரம்பம் எங்க இருக்கிறது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான தீர்வுகளை உறுதியாக எங்கள் தேர்தல் அறிக்கையில் செல்வோம் சாரி சொல்வோம். 

நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டும் தான் சொல்லுவோம். திமுக போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்க என்றால் என்ன சொல்வது. எனக்கு புரியல. என்னத்த புதுசா சொல்வது. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும். காற்றில்  கல் வீடு கட்டப்படும். அமெரிக்காவிக்கு ஒத்தையடி பாதை போடப்படும். வீட்டுக்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும். இந்த மாதிரி அடித்து விடுவோமா.

மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா சொன்ன விஷயங்களை மறந்துவிட்டு பொருந்தா கூட்டணி அமைத்துக் கொண்டு கேட்ட தமிழ்நாட்டோட நல்லனுக்காக  பாஜக கூட்டணி வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்களே அவர்களை மாதிரி இருக்க மாட்டோம். பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்? நீட்டை ஒழித்து விட்டார்களா? கல்விக்கு தேவையான நிதி நிதி முழுசா கொடுத்துட்டாங்களா? தமிழ் நாட்டுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் சரியாக செய்து விட்டார்களா? அப்புறம் எதற்காக இந்த கூட்டணி என நான் கேட்கவில்லை எம்ஜிஆருடைய உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள். முக்கியமான விஷயம் அதிமுக-பாஜக நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று நன்றாக தெரியும். ஆனால் அதே நேரம் திமுக குடும்பம் பாஜகவுடன் டீலிங் இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள். வரப்போகும் தேர்தலில் நீங்க திமுகவிற்கு ஓட்டு போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டு போட்ட மாதிரி. வெளியில் அடித்து கொள்வதைப் போல் அடிச்சுக்குவாங்க. உள்ளுக்குள்ள வேண்டாம் மக்களை ஜாக்கிரதை யோசிங்க'' என்றார். 

election campaign police namakkal district tvk vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe