dmdk Photograph: (chennai)
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று குருபூஜை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக கோயம்பேடு தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகே இருந்து விஜயகாந்தின் நினைவிடம் வரை பேரணி நடத்தவும் அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் அதிகமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருடைய நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருவதாலும் பேரணி நடக்க இருப்பதன் காரணமாகவும் சுமார் 800 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
Follow Us