கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை அடுத்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று (18-12-25) மக்கள் சந்திப்பு பரப்புரையை நடத்தவுள்ளார். ஈரோட்டின் விஜயமங்கலத்தில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை காண, இன்று அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.

Advertisment

இந்த நிகழ்ச்சிக்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பாக குடிநீர், 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் 4 மாவட்டங்களில் இருந்து வந்த போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 57 தனி பாக்ஸ்களாக அமைக்கப்பட்டு அங்கு தொண்டர்களை பிரித்து நிற்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கூட்டநெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஈரோட்டில் பரப்புரையை மேற்கொள்வதற்கு தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு கையசைத்தப்படி வெளியே வந்த விஜய், தனது கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டார். கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு பரப்புரை நடக்கும் விஜயமங்கலத்தில் விஜய் பேச இருக்கிறார்.