கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக நிலைகுலைந்த தவெக, அந்த சம்பவத்திற்கு பிறகு கட்சி தலைமைகள் பொதுமக்களை சந்திக்காமல் இருந்தது. மேலும் கட்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. அதன் பிறகு, சில நாட்களுக்கு முன்பிருந்து தங்கள் கட்சிப்பணிகளை தொடங்கிய தவெக, மீண்டும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய், புதுச்சேரி மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசினார். இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்ற வகையில் பேசியிருந்தார்.

Advertisment

இந்த சூழ்நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் செங்கோட்டையன் தலைமையில் ஈரோட்டில் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.

Advertisment

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கட்சி தரப்பிலும் செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இதற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்ததை அடுத்து, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற வசதிகளை தவெக சார்பில் செங்கோட்டையன் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சாலையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று (18-12-25) நடைபெறவுள்ளது. இதற்காக இன்று அதிகாலை முதலே ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள், விஜய் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். பகல் 11 மணியளவில் விஜய் பரப்பரைக்கு வரவுள்ள நிலையில், காலை முதலே ஏராளமானோர் குவிந்துள்ளனர். காவல்துறையினர் அறிவுறுத்தல்களை கேட்காமல கூட்ட அரங்கிற்குள் தொண்டர்கள் கூட்டமாக ஓடி வருவதால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisment

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு 81 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் விஜய் பொதுவெளியில் பரப்புரை மேற்கொள்வதால், பல்வேறு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.