மதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையும் நிகழ்ச்சியும், புதிதாக கட்சியில் சேரும் நிகழ்ச்சியும் மதிமுக தலைமையகம் தாயகத்தில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ முன்னிலையில் இன்று காலை நடைபெற்றது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த கில்பட் தன்னார்வு தொண்டு செய்யும் இளைஞர், ஏழை எளிய சமூக மக்களுக்கு தன்னால் இயன்றதை சமூக பணி மூலம் செய்து வரும் வைகோவின் அரசியல் செயல்பாடுகளால் கவர்ந்து இன்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ முன்னிலையில் தன்னை மதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவரோடு 30க்கும் மேற்பட்ட மகளிர்கள் தன்னார்வ தொண்டு அமைப்பை சார்ந்தவர்கள் தங்களை மதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் மதிமுகவில் பிரிந்து சென்ற செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தின் முன்னாள் பல்லாவரம் வடக்கு பகுதி கழக செயலாளர் வீராகுமார் மீண்டும் தன்னோடு வந்தவர்களையும் திருப்பி அழைத்துக் கொண்டு மதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Advertisment

இந்த நிகழ்வில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ வந்தியத்தேவன், மாவட்டச் செயலாளர்கள் சு. ஜீவன், கே.கழககுமார், மாவை மகேந்திரன், இணையதள அணியைச் சேர்ந்த வி. சேஷன், சதீஷ், நீதி தேவன், சிவக்குமார், புளியந்தோப்பு சாகுல் அமீது, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் குரோம்பேட்டை அ.நாசர், துரை மணிவண்ணன், முகவை சொக்கலிங்கம், கா.கோபிநாத், ஏ.கே.ஆர் சந்தோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.