Advertisment

வைரலான வீடியோ : முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!

cm-mks-viral-video

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத் திருமண விழா தஞ்சாவூரில் இன்று (05.03.2026) நடைபெற்றது. இதில் திமுகத் தலைவருரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் மகேஷ் பொய்யாமொழி, எங்களுடைய குடும்பத்தில் குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதியிடத்தில் எவ்வளவு நட்பாகப் பழகி, அவர் வளர்ந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

Advertisment

அதன் பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி; பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளி விவரமும் கையில் வைத்துக் கொள்ளாமல், எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போன்று பேசும் ஆற்றலைப் பெற்றவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரைப் பார்த்து அனைவரும் பாராட்டுகிறபோது, அவருடைய தந்தை  என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவிற்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். 

Advertisment

இப்போதும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன். இந்த மணவிழா நிகழ்ச்சி எந்தச் சூழ்நிலையில் நடந்திருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நேற்று (04.03.2026) இரவு வரை, கூட்டணிக் கட்சியோடு பேசி, ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டுத்தான், அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான், அனைவரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டுத்தான், இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்-அப்பில், சோசியல் மீடியாவில் பார்த்திருக்கலாம். அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, காரில் ஏறுகிறபோது, கையை எடுத்து, “ஓவர்” என்ற அந்த ஆக்சனோடு காரில் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள்.

cm-mks-viral-video-single

அது நான் திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வருகிறபோது, அங்கே எதிரில் நின்று கொண்டிருந்த பத்திரிகை நண்பர்கள் எல்லாம் என்னைப் பார்த்து, “முடிந்துவிட்டதா? முடிந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். “முடிந்துவிட்டது” என்று சொன்னேன், அவ்வளவுதான். அது இன்றைக்கு பெரிய வைரலாகி, ‘அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ்’ என்று போட்ட மாதிரி, இன்றைக்கு அந்தக் காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Alliance Assembly Election 2026 congress anbil mahesh Thanjavur mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe