துப்பாக்கிகள், 8 கிலோ சிகப்பு பாஸ்பரஸ் கருப்பு வெடி மருந்து மற்றும் நாட்டு துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள் இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பழையனூர் எனும் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஏர்கன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியாகிவிட்டனர். மலை கிராமத்தில் நாட்டு துப்பாக்கிகள் இருக்கும், இங்கு எப்படி? என அதிர்ச்சியான போலீஸார், தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பழையனூர் கிராமத்திற்கு சங்கராபுரம் உதவி ஆய்வாளர் பிரதாப் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.
தங்களுக்கு தகவல் தந்த போலீஸ் உளவாளி மூலம் அருளப்பன் மகன் ஜேம்ஸ் பீட்டர் என்பவர் வீட்டில் தீவிர சோதனை செய்தனர். வீட்டின் உள்ளே மறைவான இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருந்த 3 ஏர்கன் துப்பாக்கி மற்றும் 1 நாட்டு துப்பாக்கி, 8 கிலோ சிகப்பு பாஸ்பரஸ் கருப்பு வெடி மருந்து மற்றும் நாட்டுத் துப்பாக்கியை தயார் செய்வதற்கான உதிரி பாகங்கள் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் கைப்பற்றி ஜேம்ஸ் பீட்டரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு கிலோ வெடிமருந்து, துப்பாக்கிகள் கைப்பற்றியது அக்கிராம மக்களை அதிர்ச்சியடைய செய்ததுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/03/guns-2025-12-03-17-17-20.jpg)