Village administration officer's two-wheeler stolen at library center
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நூலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு குடியாத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு விதமான புத்தகங்களை படிக்க வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பேரணாம்பட்டு மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மணிவாசன் என்பவர் நேற்று (18-12-25) மாலை வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு குடியாத்தம் பகுதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவு சேவை மையத்தில் புத்தகங்களை படிக்க இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தை நூலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். புத்தகங்களை படித்து முடித்து பின்னர், மீண்டும் வெளியே வந்து பார்த்த போது அங்கு தனது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுற்றியுள்ள இடங்களில் தேடி பார்த்தும் வாகனம் இல்லாததால் அவர், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் போலீசார், நூலகத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை வைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us