Advertisment

BIG BREAKING..நடிகையுடன் தொடர்பு?; விவாகரத்து கேட்டு விஜய் மனைவி சங்கீதா வழக்கு!

vijaysangeetha

Vijay's wife Sangeeta files a divorce case alleging affair

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்தது முதலே, சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிரமாக இயங்கி வருகிறது. விஜய்யின் வருகையும் அவரது பேச்சுகளும், அரசியலில் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி வருகிறது.

Advertisment

நடிகர் விஜய் கடந்த 1998ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். விஜய் - சங்கீதா ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தொடக்கத்தில் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்துகொண்ட சங்கீதா, சமீப காலங்களாக பொதுவெளியில் தலைகாட்டாமலே இருந்து வந்தார். திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலாவந்து கொண்டிருக்கும்.

Advertisment

இந்த நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சங்கீதாவுக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சென்னையைச் சேர்ந்த இரண்டு பிரபல வழக்கறிஞர்களும் ஆஜராகியுள்ளனர். சங்கீதா தரப்பில், விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டு, தனது கணவர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் இருந்தது தெரிய வந்தது. இதனால், தான் ‘mental cruelty’ நிலைக்கு சென்றேன். இது தனக்கு ஆழ்ந்த உணர்ச்சி வலியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியது. இது திருமண நம்பிக்கையை மீறுவதற்கும் துரோகத்திற்கும் சமம்.

casevijay
வழக்கு குறித்த விவரம்

செப்டம்பர் 2021- பிப்ரவரி 2022 -ல் சமாதானம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, இந்த விவகாரத்தை மேற்கொண்டு கொண்டுசெல்ல அப்போது விரும்பவில்லை. ஆனாலும், எனது கனவர் நடிகையுடனான அந்த உறவை கைவிடுதாய் இல்லை. வீட்டிற்குள்ளேயே நான் தனித்து விடப்பட்டேன். மேலும், அந்த நடிகையுடன் வெளிநாட்டுப் பயணத்தை தொடர்ந்தபடி இருந்தார். அந்த நடிகை, இதுதொடர்பான சில படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டபடி இருந்தார். இந்தப் படங்கள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து என்னிடம் எந்தவித வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை. இந்த திருமணத்தை மீறிய உறவால், வீட்டில் இருந்த எனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. நிதி தொடர்பான எனது சுதந்திரமும் முடக்கப்பட்டது. எனவே, இந்த திருமண உறவை உடனடியாக முடித்து வைக்கவேண்டும். வழக்கு நடைபெறும் போது மாதாந்திர ஜீவனாம்சமும், வழக்கு முடிவுக்கு வந்த பிறகு முழு ஜீவனாம்சமும் தரவேண்டும்’ என அந்த மனுவில் சங்கீதா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதில் விஜய் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நடிகராக இருந்து, முதலமைச்சர் கனவோடு அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்.. தனிமனித வாழ்வில் தனது மனைவி மீது குடும்ப வன்முறையை நிகழ்த்தியும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sangeetha tvk vijay vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe