அண்மையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே அவர் சுற்றுப் பயணம் செல்வதாக இருந்த நிலையில் மதுரை மாநாட்டிற்கு பிறகு அவரது சுற்றுப்பயணம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் டெல்டா மற்றும் தெற்கு மண்டல மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனால் விரைவில் விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்பிருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisment