'விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதிமுகவை சேர்த்துக் கொள்வதற்கு யோசிப்பார். ஏனென்றால் பழனசாமி எப்பொழுதுமே அமாவாசை வேலை தான் பார்ப்பார்' என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில்,''விஜய் ரஜினிகாந்த் மாதிரி ஒரு உச்சபட்ச நடிகர். சூப்பர் ஸ்டார்.  30 ஆண்டுகள் சினிமாவில் ஒருவர் சூப்பர் ஸ்டாராகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. எப்படி அரசியலோ அதுபோல சினிமாவும் ஒரு கடினமான துறை. அரசியலில் ஒவ்வொரு நாளும் செயல்பாடுகள் இல்லை என்றால் காணாமல் போய்விடும் அது போல தான் சினிமாவும். எத்தனையோ சூப்பர் ஹிட் கொடுத்து நடிகர் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். அப்படித்தான் ரஜினிகாந்த், கமல் போன்றவர்கள் எல்லாம் இப்பொழுதும் உச்சத்தில் இருக்கிறார்கள். அதுபோல விஜய், அஜித் அதற்கு அடுத்த கட்டமாக நடிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisment

சினிமா உலகத்தில் கடுமையான போட்டியில் இருந்த பொழுதும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட விஜய் நீங்கள் நினைக்கின்ற மாதிரி இல்லை. இதை நான் விஜய்க்கு பிஆர்ஓவாகவோ சொல்லவில்லை. 30 ஆண்டு அரசியல் அனுபவத்தில், மாபெரும் தலைவர் கூட 23 வயதிலிருந்து இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். யார் மீதும் பொறாமையோ, பயமோ இல்லாமல். ஒரு குடிமகனாக பார்க்கும் பொழுது விஜய்க்கு பட்டி தொட்டி எல்லாம் அவருடைய பெயர் தெரியும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை விஜய் என்றால் தெரியும். பிரபலமே ஒரு அரசியலுக்கு மிகவும் தேவையானது. இன்றைக்கு ஊடகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வே எடுக்கின்ற நண்பர்கள் எல்லோரும் சொல்வது வருகின்ற தேர்தலில் ஒரு இம்பேக்ட்டை உருவாக்குவார் என்று சொல்கிறார்கள்.

விஜயகாந்த் உருவாக்கியதை விட மிகப்பெரிய இம்பேக்ட் உருவாக்குவார் என்று சொல்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமி மீது உள்ள தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக சொல்லவில்லை. இன்றைக்கு பழனிசாமி இரட்டை இலை இருக்கின்ற காரணத்தினாலும், பணம் பலத்தால் தான் அவரால் சுழன்று கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் அவர் 15 சதவீதத்திற்கு குறைவாக வாக்கு சதவீதத்தை அடைவார். மிகப்பெரிய இம்பேக்ட் விஜயினால் இருக்கும். விஜய் இரண்டாவது இடத்திற்கு வருகின்ற வாய்ப்பு இருக்கும். சரியான கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு சரியான போட்டியாக அது அமையும். இதனால் பழனிசாமி தலைமையிலான அணி மூன்றாவது இடத்திற்கு எதார்த்தமாக ஆட்டோமேட்டிக்காக போய்விடும். விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதிமுகவை சேர்த்துக் கொள்வதற்கு யோசிப்பார். ஏனென்றால் பழனச்சாமி எப்பொழுதுமே அமாவாசை வேலை தான் பார்ப்பார்''என்றார்.

Advertisment