தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “உங்கள் ஊருக்கே வந்து உங்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய மனசில் இருக்கிற பெரிய ஆசை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுட்டு இருக்கிற இந்த நேரத்தில் நமக்கு எதிராக சூழ்ச்சிகள் நடக்கிறது. அதனால், நம்முடைய ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் நான் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன், இது என்னுடைய வாக்குறுதி. வரப்போகிற தேர்தல் நம் தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல். இதில் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான ஒரு தேர்தல் என்று நம் ஸ்டாலின் சார் ஒரு உருட்டு உருட்டினார். இன்னும் கொஞ்சம் மேல் சென்று தமிழ்நாட்டுக்கும், என்.டி.ஏவுக்குமான தேர்தல் என்று சொல்கிறார். என்ன சார் டெல்லியில் எதாவது நிற்க போறீங்களா? இது நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறீர்களா? அப்புறம் ஏன் தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏவுக்குமான ஒரு எலெக்ஷன் என்று சொல்றீங்க. இது என்ன லாஜிக்கென்றே புரியவில்லையே.
எந்த தேர்தலை, எப்படி டீல் பண்ணனும் என்று நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவா தெரியும். நம் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ஒரு தெளிவான மக்களை நீங்க பார்க்கவே முடியாது. சூப்பர் கிளாரிட்டியோட சூப்பர் மக்கள் சார் நம்ம மக்கள்.. போருக்கு போறதுக்கு முன்னாடி தான் படை பரிவாரங்களோட போவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் ஒன்னத்துக்கும் உதவாத பால் டப்பாவ உருட்டிக்கிட்டு இருக்கீங்களேசார்... உண்மையிலே இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கிற போர், தமிழ்நாட்டு மக்களுக்கு லஞ்சத்துக்கும் நடக்கிற போர், தமிழ்நாட்டு மகக்ளுக்கும் இந்த நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் நடக்கிற போர்.. தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும் நடக்கிற போர், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கிற போர். இதற்கு நடுவில் என்.டி.ஏ, டெல்லி இதெல்லாம் என்ன லாஜிக்கென்றே புரியவில்லை. தமிழ்நாடு தான் விஜய், இந்த விஜய் தான் தமிழ்நாடு. தூய சக்தி டிவிகேவுக்கும், தீய சக்தி டி.எம்.கேவுக்கும் தான் இந்த போர்.
அவரோடு ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறது என்று சொல்கிறார். தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் தான், காமராஜர் ஆட்சியில், அண்ணா ஆட்சியில், எம்.ஜி.ஆர் ஆட்சியில். இன்றைக்கு ஒன்னத்துக்கும் உதவாத இந்த உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் எல்லாம் ஒன்றும் இல்லை, சூப்பர் ஸ்டாண்ட் அப் காமடிகாரர் நடத்துற மாநிலமாக தான் மாறிடுச்சு. மக்களே உங்களுக்காக தான் உங்களுக்காக மட்டும் தான் வருகிற தடைகள், சதிகள், சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் தாண்டி இந்த 2026 தேர்தலில் டிவிகே தில்லா நிற்கும். இதுவரைக்கும் நடந்த தேர்தல் வேறு, இப்போது நடக்கப்போகிற தேர்தல் வேறு. ஒவ்வொரு 5 வருடத்துக்கு ஒரு முறை நடக்கிற தேர்தல் மாதிரி இதை நினைத்துவிடாதீர்கள். 50 வருடத்திற்கு ஒரு முறை நடக்கப்போகிற ஒரு தேர்தல் மாதிரி இது. இது அதிசய எலெக்ஷன். ஒரு எலெக்ஷனில் அவர்களோடு எதிரிகளை தான் எதிர்ப்பார்கள்., அது தான் எதார்த்தமும் கூட. ஆனால் இந்த தேர்தலில் ஒட்டு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் இந்த விஜய் ஊழலை, லஞ்சத்தை எதிர்க்கிறான், மக்களோடு மக்களாக நிற்கிறான், அந்த மக்கள் அவன் கூட நிற்கிறார்கள். அந்த காண்டில் தான் ஒட்டுமொத்தமாக எல்லோருமாக சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் போட்டி டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும் நடுவில் மட்டும் தான் போட்டியே.
உங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான் எல்லோருக்குமே தெரியும். அது நம்முடைய எதிரிகளுக்கு கூட நல்லாவே தெரியும். அதனால் தான் நமக்கு எதிராக அவ்வளவு அவதூறு பரப்புகிறார்கள். என் மேல் அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புகிற மாதிரி என்று அவர்களுக்கு தெரியாது. அரசியல் தெரியவில்லை என்று சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்கிற மாதிரி. எனக்கு எதிராக செய்கிற ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிராக செய்கிற செயல் அவர்களுக்கு தெரியாமல் போச்சு. இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி, உடலும் உயிரும் மாதிரி. இதை பிரிக்கவே முடியாது. சென்ஷிட்டிவான செண்டிமெண்ட் அது. இதை யாரும் அசைக்க முடியாது” என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போதே விஜய் கண்கலங்கினார். இதை கண்ட மக்களும் ஆரவாரமிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/vijaycry-2026-02-23-16-44-49.jpg)