கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நாளை (27.10.2025 - திங்கள்கிழமை) தனித்தனியாக விஜய் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன்படி மாமல்லபுரம் போர் பாயின்ட் தனியார் விடுதியில் இந்த சந்திப்பு நாளை காலை நடைபெறுகிறது. இதற்காக, 41 பேரின் குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகிகள் மாமல்லபுரத்துக்கு அழைத்து வருகின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.
அவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தங்க வைப்பதற்காக, அந்த ஹோட்டலில் 50க்கும் மேற்பட்ட அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அங்கு, பாதிக்கப்பட்டவர்களை விஜய் தனித்தனியாக சந்தித்து, அவர்களுடன் பேச இருக்கிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த மாதம் அதே நாளில் அவர்களது குடும்பத்தினரை விஜய் சந்திக்க இருப்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் இருந்து 5 ஆம்னி பேருந்துகள் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் இன்று (26.10.2025) சென்னை அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதாவது தவெக நிர்வாகிகள் வாகன மூலம் அழைத்து வரப்பட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆம்னி பேருந்துகளில் புறப்பட தயார் நிலையில் உள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் 3 முதல் 4 பேர் என தவெக தலைவர் விஜய்யை சந்திக்க உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/26/karur-to-mallapuram-stampede-2025-10-26-12-17-06.jpg)