கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற அனைவரும் தற்போது வீடு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறி விரைவில் தங்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, கரூர் கருப்பாயி கோயில் தெரு பகுதியில் உயிரிழந்த சிறுவன் கிருத்திக் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் பேசிய தவெக தலைவர் விஜய் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.