தமிழ்நாடு அரசியல் களத்தை நாகரிகமாகவும், தமிழ்நாடு மரபுகளுக்கு ஏற்ற ஒரு களமாகவும் மேம்படுத்த நினைக்கிறோம். ஆனால் அண்மை காலமாக தமிழ்நாடு அரசியல் களத்தை மிகவும் கீழிறக்கி அவதூறுகளாலும் பொய்கலாலும் வன்மத்தாலும் அதை மாற்ற துடிக்கிற சக்திகளாக பாஜக, சன் பரிவார் சக்திகள் விளங்குகிறார்கள். அதனுடைய குறியீடாக கமலாலயம் வாசலில் அன்றாடம் அண்ணாமலை அவருக்கு தோன்றுவதையெல்லாம் பேசுவார். அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அவற்றை பேசுவார். அது உண்மையா பொய்யா என்று ஆரயாமல் பேசுவார். அதே வேலையை ராஜ் பவனில் உட்கார்ந்து கொண்டு ஆளுநர் ரவியும் செய்து கொண்டிருந்தார். இப்போது ஆளுநர் ரவியும் கொஞ்சம் அடங்கியிருக்கிறார். அண்ணாமலையும் கொஞ்சம் அடக்கப்பட்டிருக்கிறார். இப்போது ஆளுநரின் வீச்சும், அண்ணாமலையின் வீச்சும் ஓய்ந்து இருக்கிற நிலையில் அந்த அவதூறுகளை இட்டு கட்டப்பட்ட பொய்களை வாயில் வந்ததையெல்லாம் பேசிகிற அந்த பேச்சுக்களை விஜய் கையில் எடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கி நாங்கள் மாற்று அரசியலை கொண்டு வந்து நிருவப் போகிறோம் என்று சொல்லி களத்திற்கு வந்திருப்பவர் களத்துக்கு வந்து கொண்டிருப்பவர் விஜய். நேற்று நாகப்பட்டினத்திற்கு வருகை தந்து முழுக்க முழுக்க Factual Error என்று சொல்லக்கூடிய பொய் தகவல்களை பரப்பி விட்டு சென்றிருக்கிறார். நாகப்பட்டினத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை குறித்து எந்த விதமான ஆய்வை செய்யாமல் அங்கே மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் கடந்த 41/2 ஆண்டுகளில் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது என்பதை பற்றிய எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் வன்மத்தோடும் பொய்யை சொல்ல வேண்டும் என்று சொல்லிருக்கிறார். அவர் வரும்போது அவருடைய பிரசாரப் பயணத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர் தான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கடிதம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அங்ககே அவர் அதை அரசாங்கம் ஏதோ திட்டமிட்டு செய்கிறது என்கிற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றார். இப்படி முன்னுக்கு பின் முரணாக பொய்யை சொல்லி தன் மீது கவனத்தை ஈர்க்கிற இந்த வழக்கம் என்பது நாம் பாஜகவில் தான் பார்த்தோம் அந்த வழக்கத்தை அதை இப்போது இவரும் செய்கிறார். எனவே இவர் யார் சொல்லி செய்கிறார் எதற்காகா செய்கிறார் என்கிற கேள்வி வருகிறது. பாஜகவின் தன்மையை இவர் ஏன் பிரதிபலிக்கிறார் என்கிற சந்தேகம் வருகிறது அவர் மீது அவர் அரசியலை நேர்மையாக செய்யலாம். புதிய அரசியல் சக்தி என்று தன்னை காட்டிக்கொள்பவர், புதிய அரசியலை செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிய பட வேண்டிய அரசியலாக நாம் எந்த அரசியலை பார்கிறோமோ, அவதூறு அரசியல், வன்ம அரசியல் அதை இவர் ஏன் கையில் எடுக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது? அவர் நாகப்பட்டினம் குறித்து வைத்த அத்தனை கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் இருக்கிறது.
ஏற்கனவே அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. கடந்த 41/2 ஆண்டு காலத்தில் நாகப்பட்டினத்துடைய பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக அவர் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படவில்லை, கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை என்கிற குற்றசாட்டை வைத்திருக்கிறார். என்னுடைய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மீனவ கிராமகங்களில் குறிப்பாக சாமாந்தான் பேட்டை என்கிற கிராமத்தில் மீன் பிடி துறைமுகம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை, அந்த நீண்ட கால கோரிக்கையை இந்த ஆட்சி காலத்தில் தான் நிறைவேற்றி IIT யிலிருந்து ஆய்வு குழு எல்லாம் வந்தது, ஆய்வு செய்து பார்த்து இங்கு அமைக்கலாம் என்று பரிந்துரைத்து அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கிட்டதட்ட ரூ.32 கோடியில் அந்த திட்டம் நிறைவேற கூடிய அளவுக்கு அந்த கோரிக்கை ஏற்க்கப்படுகிறது அந்த வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதுபோல நம்பியார் நகர் என்கிற பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுகிறது என்று அந்த மக்கள் மிகவும் வருந்தினார்கள், கோரிக்கை வைத்தார்கள்.
கடந்த ஆட்சி காலத்தில் எல்லாம் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இந்த ஆட்சி வந்த பிறகு சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் பேசி அந்த ஊருக்கு ரூ.10 கோடி செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. அது போல நாகூர் பட்டிணச்சேரியில் என்னுடைய தொகுதிக்குட்பட்ட ஊர்களை சொன்னால் மட்டுமே மிகப் பெரிய பட்டியலை போடமுடியும். நாகூர் பட்டிணச்சேரியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல நம்பியார் நகர் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையம் ரூ.6 கோடி செலவில் அந்த மையம் எழுப்பப்பட்டிருக்கிறது. மீனவ மக்களை பாதுகாக்க கூடிய புயல் வந்தால் அந்த பாதிப்பிலிருந்து மக்களை காக்க கூடிய புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டுள்ளது. மீனவே மக்கள் சார்ந்தே என்னுடைய தொகுதிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட அக்கரைப்பேட்டை மிகப்பெரிய மீனவ மக்கள் வாழக்கூடிய பகுதி அங்கே ரூ.100 கோடி செலவில் மீன் இறங்கு தளம்/மீன் பதப்படுத்தும் மையம் எல்லாம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
வேளாங்கண்ணியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அது போல சுற்றுலா மேம்பாட்டில் என்னுடைய தொகுதியில் நாகூர் சில்லடி கடற்கரையில் கிட்டதட்ட ரூ.6 கோடி செலவில் ஒரு நெய்தல் பூங்கா, ரூ.2/12 கோடி மதிப்பில் இன்னொரு பூங்கா இசை முரசு நாகூர் அனிபா நூற்றாண்டை முன்னிட்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. பல்வேறு கட்ட பணிகள் சுற்றுலா மேம்பாட்டிற்காக, மீனவ நலனுக்காக அது போல் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த ஆட்சி அமைவதற்கு முன்னாள் தேர்தலை சந்திக்கும் போது நாகப்பட்டினத்தில் அக்கரைப்பேட்டையில் மேம்பாலம் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை இணைக்க கூடிய மேம்பாலம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது, அந்த இரயில்வே பாதையின் மேம்பாலம் கட்டி வைத்து இணைப்பு இல்லமால் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது, நிலம் கையகப்படுத்த நிறைய பொருட் செல்வு ஆகும் என்று கைவிடப்பட்ட திட்டம், இந்த ஆட்சி வந்த பிறகு நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பாலம் கட்டப்பட்டு 75% பணிகள் முடிவடைந்துள்ளன.
இப்படி அவர், எதையும் அங்கே என்ன நடந்து இருக்கிறது என்று கூட தெரிஞ்சிக்காம அங்கே எவ்வளவு பெரிய வேலைகள் செய்யப்பட்டு இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல் பேசியிருக்கிறார். காவிரி இணைத்தீர்களா? குடிநீரை கொண்டு வந்திங்களா என்று பேசியிருக்கிறார்?நாகப்பட்டினத்தில் ரூ.1,700 கோடி செலவில் குடிநீர் திட்டம் மிகப் பெரிய திட்டம் நிறைவேற்றப்படு முடியும் தருவாயில் உள்ளது. ஒவ்வொரு வீட்டிற்க்கும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, அதனால் சாலைகள் தோண்டப்பட்டு அதன் பணிகள் சில தோய்வுகள் ஏற்ப்பட்டுள்ளது. இந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்படும். அவர் என்ன குற்றசாட்டு வைத்தாலும் அந்த குற்றசாட்டுக்கு பதில் இருக்கிறது. அவர் வைத்த எந்த குற்றசாட்டுமே உண்மையிலேயே அந்த மண்ணுக்கு என்ன தேவை இருக்கிறதோ என்ன கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதோ இருக்கிறதோ அதை சொல்லியிருந்தால் அது மக்கள் நலனிலிருந்து பேசுவதாக சொல்லலாம்.
மக்களுக்கு இந்த தேவை இருக்கு அதை அவர் Address பன்றார், புதிய கட்சியா அதை கையில் எடுத்து பேசுகிறார் என்றால் அது மக்கள் நலன் சார்ந்தது. ஆனால் ஏற்கனவே மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அரசிடம் முறையிட்டு சட்டமன்றத்தில் வாதாடி அரசு அதை கணிவோடு பரிசிலனை ஏற்றுக் கொண்டு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றுபட்டு வருகின்ற திட்டங்களை எல்லாம் செய்யவே இல்லை என்று சொல்வதன் பிண்ணனி என்ன?
இந்த அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார் ஒன்று. இப்படி எல்லாம் பொய்யே பேசுவதன் மூலம் அவர் சாதிக்க நினைப்பது என்ன? உண்மையை பேசுங்க! உண்மையிலேயே இந்த மண்ணுக்கு என்ன தேவை என்பதை சொல்லுங்க?.நாகூர் மருத்துவமனை என்பது 40 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்த மருத்துவமனையை இந்த அரசு வந்த பிறகு முழுக்க அந்த பழைய கட்டிடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு ரூ.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அந்த மருத்துவமனை புதிதாக கட்டுவதனால் தற்காலிகமாக வேறோரு இடத்தில் அந்த மருத்துவமனை இயங்கி கொண்டு வருகின்றது. அந்த மருத்துவமனையில் நான்கு பணியாளர்கள் மருத்துவர் உள்ளிட்ட அங்கு இருக்கிறார்கள். அங்கு Vacant இல்லை. இது எல்லாம் தெரியாமலேயே அங்கு வந்து பேசி வருகிறார்?
ஒட்டு மொத்த நாகப்பட்டினத்திற்கு மருத்துவர் என்பது நீண்ட கால பிரச்சனையா இருக்கு, என அங்கு மருத்துவர்கள் பணியாற்றுவதற்கு பெரிதாக ஆர்வப்பட வில்லை. இராமநாதப்புரத்தில் அவர்களை பணி அமர்த்துவதால் அவர்களை தண்டிக்கப்படுவதாக ஒரு புரிதலுடன் இருக்கிறார்கள்? அதே நிலை தான் தற்போது அவர்களிடம் இருக்கிறது! இந்த அரசு வந்த பிறகு முடிந்த வரைக்கும் Closer System த்தின் மூலம் மருத்துவ பணியாளர்களை ஒவ்வொரு கட்டத்திலும் செய்து வரக் கூடிய பணியை பார்கிறோம். நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் அது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட கூடிய சூழலை நாம் பார்கின்றோம். இப்படிபட்ட இடத்தில் சுற்றுலா துறை, மருத்துவ துறை மற்றும் சார்பாக வைத்த குற்றசாட்டுகளை நாம் பார்கிறோம்.
கோட்டை வாசல் பாலம் இன்னும் Stability இருக்கு இன்னும் பல ஆண்டுகள் தாங்கும் என்று பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கூறியுள்ளனர். இந்த அரசு அமைந்த பிறகு அந்த பகுதியில் Infrasturcture Development அந்த மக்களுக்கு தெரியும்.இவருக்கு உண்மையை சொல்லி அரசியல் செய்வதற்கு ஏதும் இல்லாமல் அவதூறு அரசியலை பொய் அரசியலை கையில் எடுத்துள்ளார். அவர் உண்மையிலேயே மக்களுக்கு தேவையான அரசியலை பேசட்டும்! அண்ணாமலை மற்றும் R.N. ரவியின் இடத்தை நிரப்புவதற்கு அவர் தேவையில்லை.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம்/இரயில்வே நிலையம் தொடர்பான குற்றசாட்டு, ஒன்றிய அரசிடம் ஒவ்வொன்றாய் பெறுவதற்கு அதுவும் கல்வி ரீதியாக பெறுவதற்கு எவ்வளவு போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அவர் யாரை குற்றம் சாட்ட வேண்டும்?திமுகவை குறி வைப்பதற்கான அஜெண்டாவை யார் கொடுத்திருக்கிறார்களா? மாநில உரிமை, நிதி பகிர்வு, கல்வி நிதி, வாக்கு திருட்டு, நதி நீர் பிரச்சனை இவற்றின் நிலைபாடு என்ன? (ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைபாடு என்ன?).தமிழ் நாட்டின் அரசியல் களத்தை மக்கள் கூர்மையாக பார்கிறார்கள். விஜய் வரும் கூட்டம் என்பது சினிமா கவர்ச்சி வருகிற கூட்டம்.நீங்கள் முதலில் பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்? 2026 ஒரு படத்திற்கு 6 மாதம் கால்சீட் கொடுத்தது போல் இந்த 2026 தேர்தலுக்கு கால்சீட் கொடுத்துள்ளீர்கள்.
பொய் பேசிய 2 IPS நிலைகளை பார்க்கிறோம். அது போல மக்களால் நிராகரிப்படக்கூடிய நிலையில் தான் விஜயக்கு வரும். Factual Error பேசக் கூடிய அரசியல் யாருடையது?திமுக மற்றும் திமுக கூட்டணி மீது அவதூறு செய்கிறார்? பாஜக எதிர்ப்பை திமுக கூட்டணியை விட முன்னேடுப்பறா?
மீன்வ பல்கலைக் கழகம், நாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. இருக்கிறதை இல்லை என்று ஏன் சொல்கிறிர்கள். இரயில்வே தொழிற்சாலை 100 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் அரசிடம் தான் முறையிட வேண்டும்? வெளி நாட்டு முதலீடுகள்/பயணங்களுக்கு இது வரை பாஜக Press வைத்த குற்றசாட்டுகளை நிருப்பிக்க வில்லை? வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கான சான்றுகளை காட்ட சொல்லுங்க? விஜய், அண்ணாமலை மற்றும் R.N.ரவியின் வேலையை கையில் எடுத்துள்ளார். நம்பியார் நகர் இருக்கும் ஒவ்வோரு மீனவர் தலையில் பல இலட்சங்கள் கடன் சுமை வைத்த அரசு எடப்பாடியார் அரசு! இந்த அரசு அந்த பிரச்சனையை தீர்க்கும் என்பது மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுக மற்றும் தவெக மட்டும் தான் போட்டி என்றால் அதில் யாருக்கு பிரச்சனை? இதை பற்றி யாரும் பேசவில்லை?25 ஆண்டுகளுக்கான விசிக வாக்கு வங்கி உள்ளது. திரும்ப திரும்ப ஒரு போலியான பிம்பம் வைக்கப்படுகிறது? எப்படி எங்கள் ஓட்டை வாங்குவார். எங்கள் மீது வைத்துள்ள குற்றசாட்டுகளுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம்.