தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய்யின் த.வெ.கவும் தீவிரமாகத் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஆனால், கரூர் சம்பவத்துக்குப் பிறகு நடிகர் விஜய் பிரச்சாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியதோடு, மக்கள் சந்திப்பையும் முற்றிலுமாகத் தவிர்த்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சேலத்திலிருந்து மீண்டும் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கத்தில் அம்மாவட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நீண்ட நேரம் ஆளும் அரசு குறித்து பேசிய விஜய், தவெகவினரை தற்குறிகள் என விமர்சிப்பதாகவும் கூறி கடுமையாக சாடியிருந்தார்.

Advertisment

இது தொடர்பாக பேசிய விஜய், “இது ஒரு அதிசயம் என்று சொல்ல முடியாது… இது கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மை என்று சொல்லலாம். அதாவது, நம்ம தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக நிற்கும் கோடிக்கணக்கான மக்கள், நம்ம நண்பர்கள், நண்பிகள், ஜென்-இசட் குழந்தைகள் எல்லாரையும் ‘தற்குறிகள்’னு சொல்லி வாங்கிக் கட்டிக்கிட்டாங்க. இப்போ திடீர்னு ‘இவங்க எல்லாம் தற்குறி இல்லை, சங்கி இல்லை, அப்படி கூப்பிடாதீங்க’னு ஒரு குரல் வருது.

யாருடா அந்தக் குரல்?னு பார்த்தா… ரீசன்ட்டா ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்தினாங்கல்ல… சாரி, ‘அவதூறு திருவிழா’னு சொல்லலாம். அதுல அவங்க தலைமையே குழப்புற மாதிரி, அறிவுக் கண்ணைத் திறக்குற மாதிரி ஒருத்தர் பேசியிருக்காரு.அவர் யாரு தெரியுமா? அவங்களோட எம்எல்ஏ-தான். அந்த எம்எல்ஏ யாரு? நம்ம கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளோட சொந்தக்காரர். என்னடா இது… இப்படியா ஆயிப்போச்சு? தவெக-வுக்கு ஆதரவு தர்ற மாதிரி நம்ம கட்சியிலிருந்தே ஒரு குரல் வருதேனு தலைமையிலேயே ஃபுல்லா கன்ஃப்யூஷன் ஆயிடுச்சு.

Advertisment

ஆனா இந்தக் கன்ஃப்யூஷன் இதோடு நிக்கப்போறதில்லை. இந்த ஆதரவுக் குரல் ஒரு வீடு விடாம, ஒரு இடம் விடாம எல்லா இடத்துலயும், எல்லா வீடுகளிலும் இன்னும் பலமா எதிரொலிக்குதா இல்லையான்னு பாருங்க… பிளாஸ்ட்… பிளாஸ்ட்தான்! இது இன்னைக்கு நேத்து நடந்தது இல்லைங்க… 1972-லேயே நடந்து முடிஞ்சிருச்சு. எம்ஜிஆர் கட்சி ஆரம்பிச்சதுமே ‘இது ஒரு கூத்தாடி கட்சி’, ‘நடிகர் கட்சி’, ‘நடிகர் கூட்டம்’னு சொன்னவங்க பின்னாடி எம்ஜிஆர் கூடவே போய் சேர்ந்துட்டாங்க. இன்னொருத்தர் ‘இவங்க எல்லாம் ஒரு ரவுண்டுதான் தாங்குவாங்க, ரெண்டாவது ரவுண்ட்ல காணாம போயிடுவாங்க’னு சொன்னாரு… அதுக்கப்புறமும் எம்ஜிஆர் கூடவே போய் சேர்ந்துட்டாரு. அதனால இவங்க ரெண்டு பேர் மட்டுமில்ல… ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுமே எம்ஜிஆர் பக்கம்தானே வந்து சேர்ந்தாங்க!

இதுதான் வரலாறு. இந்த வரலாறு நம்மைவிட அவங்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். அதனாலதான் 53 வருஷமா அதே கதறல்: ‘கூத்தாடி… கூத்தாடி கூட்டம்… நடிகர்… நடிகர் கட்சி… நடிகர் கூட்டம்…’னு. மர்மயோகி படத்துல கரிகாலன் கேரக்டர்ல ஒரு டயலாக் சொல்வாரு எம்ஜிஆர்: ‘குறி வைத்தால் தவற மாட்டேன்… தவறினால் குறி வைக்கவே மாட்டேன்.’இதை யாருக்கு சொல்றோம்? எதுக்கு சொல்றோம்?னு புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா போதும். ‘ஏன் இந்த விஜயைத் தொட்டோம்? ஏன் விஜய்கூட இருக்கிற மக்களைத் தொட்டோம்?’னு நினைச்சு நினைச்சு பீல் பண்ணப் போறீங்க.

நமக்கு அரசியல் புரியலையாம்… இல்லையாம்… அப்படினு கூறுறாங்க. அப்போ நான் கேட்கிறேன்: மக்கள் எல்லாரும் உங்களுக்கு ‘தற்குறிகளா’?அதே மக்களோட ஓட்டு வாங்கப் போற நாங்க ‘தற்குறி’னா… இவ்வளவு நாள் அதே மக்கள் கிட்டத்தானே நீங்க ஓட்டு வாங்கினீங்க? அப்போ அந்த மக்களுக்கு நீங்க காட்டுற மரியாதையும் நன்றியும் இதுதானா?

ஒண்ணு மட்டும் எழுதி வச்சுக்கங்க: இந்த ‘தற்குறி தற்குறி’னு சொல்ற தற்குறிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து, வாழ்நாள் பூரா விடை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்க அரசியலை ஒரு பெரிய கேள்விக்குறியாக்கப் போறாங்க. இவங்க யாரும் தற்குறிகள் இல்லை. இவங்க எல்லாம் தமிழ்நாட்டு அரசியலோட ஆச்சரியக்குறி! இவங்க எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்துக்கான அறிகுறி! இந்தப் போட்டி எப்படி இருக்கப் போகுதுன்னா…

மக்களோடு மக்களாக நிற்கிற நமக்காக மக்களே டிசைட் பண்ணி விட்டாங்க. மை டியர் சார், மை டியர் அங்கிள்… ஆல்ரெடி டிசைட் பண்ணியாச்சு. கான்ஃபிடென்டா இருங்க மக்களே… நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை… நன்றி… வணக்கம்” என்றார்.

படம் - ஸ்டாலின்