'Vijay is left with nothing but disappointment...' - Interview with former minister Jayakumar Photograph: (admk)
செப்டம்பர் 15 இன்று திமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''அண்ணா தன்னுடைய வாழ்நாளிலே வாழ்ந்து காட்டிய ஒரு மாபெரும் தலைவர். அதனால்தான் இன்றைக்கும் கூட மட்டுமல்ல இந்த உலகம் இருக்கும் வரை அண்ணாவின் புகழ் இந்த மண்ணில் நிலைத்திருக்கும். செங்கோட்டையன் மன்னிப்போம் மறப்போம் என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். இது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்ஜிஆர், அண்ணா உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் அந்த மாபெரும் தலைவர்களின் படத்தை உபயோகிக்கிறார் என்று சொன்னால் அது ஒரு வரவேற்கத்தக்க விஷயம் தான். எங்கள் தலைவர் எல்லா தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மாபெரும் தலைவராக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் ஓட்டுக்கள் வருமா வராதா? கண்டிப்பாக அதிமுக ஓட்டு என்பது எம்ஜிஆர் படத்தை போடுவதால், அண்ணாவின் படத்தை போடுவதால் விஜய்க்கு போகாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். போய் வணங்கட்டும் போற்றட்டும். பேருந்தில் அண்ணாவினுடைய திருவுருவம் எம்ஜிஆரின் திருவுருவம் பதித்துக் கொண்டு போகட்டும்.
எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அதேநேரத்தில் அது ஓட்டுக்களாக மாறுமா? அதிமுக ஓட்டு விஜய்க்கு போகுமா என்றால் ஒரு காலத்திலும் போகாது. அதில் விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். மதுரை மாநாட்டில் மு.க.ஸ்டாலினை அங்கிள் என விஜய் பேசியிருந்தார். ஆனால் இப்பொழுது பேசுகையில் 'ஸ்டாலின் சார்' என்று பேசுகிறார். என்கிட்ட கேட்டிருந்தால் கூட விஜய்க்கு லீட் கொடுத்திருப்பேன் 'சிஎம் ஸ்டாலின் சார்' என்று சொல்வதைவிட சிஎம் சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். அவருடைய மகன் உதயநிதியை மை டியர் குட்டிச்சாத்தான் என்று சொல்லி இருக்கணும். என்னிடம் கேட்டால் அப்படி சொல்லுங்கள் என்று சொல்லி இருப்பேன்'' என்றார்.