உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை (08-03-26) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விஜய் அறிவிப்பதாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார். அந்த வகையில் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியும், சமூக செயற்பாட்டுக் குழுவைத் தோற்றுவித்தவருமான கிரேஸ் பானு, பைக்கர் மாயா, இஸ்ரோ பெண் விஞ்ஞானி, கால்பந்து பயிற்சியாளர் தமிம் முனிஷா, ஊடகவியலாளர் ஷோபனா உள்ளிட்ட பலரையும் விஜய் கெளரவித்தார்.