'Vijay has scored a half-century' - Minister Nassar's action Photograph: (dmk)
நேற்று சேலத்தில் நடைபெற்ற தவெக விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அப்போது உயிரிழப்பில் விஜய் அரைசதம் அடித்து விட்டதாக சிரித்தபடியே நாசர் பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசரிடம் உரிமைத் தொகை 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இன்றைக்கு தான் தமிழக மக்களுக்கு பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ். எப்படி மத வழிபாடு செய்வார்களோ அதேபோல் எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர்'' என்றார்.
'தோல்வி பயத்தில் கூடுதலாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன' என செய்தியாளர்கள் அடுத்த கேள்வியை தொடுக்க, அமைச்சர் நாசர் பதிலளிக்காமல் தன் ஓட்டுநரிடம் காரை எடுக்குமாறு சைகை காட்டினார். 'சேலத்தில் நடைபெற்ற விஜய் கூட்டத்தில் ஒருவர் இறந்தது' குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ''விஜய் அரை சதம் அடித்துள்ளார்'' என தெரிவித்து மேலே போய்விட்டார்கள் என்பதைப்போல் சைகை காட்டி சிரித்தார். அமைச்சரின் செயல் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Follow Us