Advertisment

'ஏற்கனவே கொள்ளையடித்த விஜய்'-திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

807

'Vijay has already looted' - Dindigul Srinivasan's criticism Photograph: (admk)

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ''எம்ஜிஆரோடு 1972ல் இருந்து, அவர் படங்களை பார்த்து வளர்ந்து, தவறான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்று உணர்ந்து இத்தனை வருட காலம் வாழ்ந்து கொண்டிருக்கும் அதிமுக தோழர்களை பார்த்து ஊழல் கட்சி, மோசமான கட்சி என்று சொல்லி அதிமுகவை குறை சொல்லி  விஜய் பேசுகிறார் என்று சொன்னதற்கு பிறகுதான் மூன்று தினங்களாக அவருடைய குறைகளை நாங்கள் எல்லாம் சொல்லி வருகிறோம்.

Advertisment

எங்களைப் பார்த்து ஊழல் என்று சொல்லுகிற விஜய் அவர்களே நீங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு? உண்மையிலேயே ஒரிஜினலாக ஒயிட்டில் வாங்குவது எவ்வளவு பிளாக்கில் வாங்குவது எவ்வளவு? அதற்கு நீங்கள் கட்டிய வரி எவ்வளவு? மீதி பணம் எல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று நானும் கூட கேட்கிறேன். ஆனால் இன்றைக்கு ஒரு படத்திலே வருமானத்தை குறைத்தார் என்று சொல்லி. ஒன்றரை கோடி ரூபாய் அவருக்கு அபராதத்தை வருமானவரித்துறை கேஸ் நடந்துகிட்டு இருக்கிறது. ஆக இவர்  மறைத்திருக்கிறார் என்று ஒரு வழக்கு இருக்கிறது.

Advertisment

200 ரூபாய் டிக்கெட் தியேட்டரில் விதிக்கப்பட்டிருக்கிறது. அது 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த பணம் பட தயாரிப்பாளர்களுக்கு போகிறது. அப்படி போவதால்தான் அவர் படத்துக்கு மரியாதை கூடுகிறது. அவருக்கு 500 கோடி ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். அதைப் பெற்றுக் கொண்டிருக்கிற விஜய் நேற்றைக்கு முன்தினம் தொலைக்காட்சியில் பேசுகிறார்.  ஒரு பைசாவை நான் ஆளுங்கட்சியில் இருந்தால்  தொட மாட்டேன். அது எனக்கு தேவையில்லை என்கிறார். ஏனென்றால் ஏற்கனவே டிக்கெட் விற்று அதிகமாக கொள்ளை அடித்த அந்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே அரசாங்கத்தில் இருந்து அல்லது வேறு வழியில் இருந்து வரும் பணம் தேவை இல்லை என்கிறார்'' என்றார்.

admk Dindigul Seenivasan tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe