கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் நடிகர் விஜய் வீடியோ காலில் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் வரும் 17 ஆம் தேதி  விஜய் கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

வெளியான தகவல் படி வரும் 17 ஆம் தேதி கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தவெக தரப்பில் கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.  41 குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை  விஜய் வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்வார் என்றும் பொதுமக்களுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தவெக  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உறுதியான தகவல் அக்கட்சியின் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வரும் அக்.13  ஆம் தேதி விஜய் கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment