Vijay Ganesha Chaturthi Greetings Photograph: (tvk vijay)
விநாயகர் சதுர்த்தி திருவிழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பிள்ளையார்பட்டியில் தேரோட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெற்று வருகிறது.
சிறிய களிமண் சிலைகள் முதல் 10 அடி முதல் பல்வேறு உயரங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகிறது. கொழுக்கட்டை பிள்ளையார், தேங்காய் பிள்ளையார் என பல்வேறு வகைகளில் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்' என தெரிவித்துள்ளார்.