Advertisment

தி.மு.க.வில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர்!

vijay-pa-selvakumar-dmk

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை எனத் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையமும் எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பணிகள் மூலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இந்நிலையில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார், இன்று (11.12.2025) தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்  முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.  திமுகவில் இணைந்த பி.டி. செல்வகுமார் நடிகர் விஜய்யின் புலி திரைப்படத்தின் தயாரிப்பாளரார் ஆவார். நடிகர் விஜய்யோடு பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர் பி.டி. செல்வகுமார்.

anna-arivalayam

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தன்னுடைய ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உடன் திமுகவில் இணைந்துள்ளார். இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தையும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக செல்வக்குமார் விருகம்பாக்கத்தில் ஹோட்டல் ஒன்றைத் திறக்கும் போது அந்த திறப்பு விழாவிற்கு நடிகர் விஜய்  வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விஜய்யின் பல்வேறு படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக செல்வகுமார் இருந்துள்ளார். மற்றொருபுறம் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டின்படி வட சென்னை பகுதியைச் சேர்ந்த த.வெ.க.வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் இன்று திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

dmk anna arivalayam Assistant mk stalin Tamilaga Vettri Kazhagam tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe