புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ளது அண்ணா சிலை. தலைவர்கள் சிலைகள் மீது யாரும் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (22.08.2025) ஒரு நபர் திடீரென போதையில் அண்ணா சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு மேலே ஏறி படுத்துக் கொண்டு, “விஜய் இங்கே வந்தால் தான் இறங்குவேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அந்த நபரை கீழே இறக்கி விசாரனை செய்தனர். அப்போது அவர் பொற்பனைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் நாகலாஜ் தான் போதையில் மேலே ஏறியது என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலிசார் விசாரனைக்கு அழைத்துச் சென்றனர்.