தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற ஸ்டாலின் சார் வேண்டுமா? இது தான் ஆதாரம். இந்த தீய சக்தி, ஊழல் சக்தி இதெல்லாம் ஏன் சொல்கிறோம், யாரை சொல்கிறோம் என்பதெல்லாம் மக்களுக்கு தெளிவாக தெரியும். டிவிகேவுக்கு போட்டி டிஎம்கே தான் என்றும் மக்களுக்கு தெளிவாக தெரியும். அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் சில பேர் அவர்களே வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு குரல் கொடுக்கிறார்கள். சீரியஸா ஒரு போட்டி நடந்துட்டு இருக்கும் போது இங்கே காமெடிக்கு எல்லாம் இடம் இல்ல பாஸ். இதெல்லாம் மக்களுக்கு தெளிவாக தெரியும். ஒரு சீரியஸ் கேள்வியை இன்றைக்கு இருக்கிற மிகப்பெரிய அரசியல்வாதிகளிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடி உங்களிடம் இருந்த சொத்து எவ்வளவு? அரசியலுக்கு வந்ததற்கு பிறகு உங்களிடம் இருக்கும் சொத்து எவ்வளவு? அதை வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்படி வந்த பணமெல்லாம் என்னென்ன தொழில் செய்து வந்தது? என்ன வேலை செஞ்சு வந்தது? உண்மையிலேயே நீங்கள் உழைத்து சம்பாதித்த பணமா இல்ல? ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததற்கு அப்புறம் ஆட்டைய போட்ட பணமா? இதெல்லாம் வெளிப்படையாக வெளியிட முடியுமா?.
இதெல்லாம் நாம் கேட்டால் எல்லா ஊழல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து நம் மேல் சேற்றை வாரி வீசுவாங்க. அதை பற்றி நமக்கு கவலை இல்லை. ஜனநாயகம் என்பது பெரும்பான்மை ஆட்சி அதிகாரம் சார்ந்தது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்வுகளும் புனிதம் என்று நினைத்து அதையெல்லாம் காப்பதற்கு பெயர் தான் ஜனநாயகம் என்று 1963இல் அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் பேசினார். அறிஞர் அண்ணா சொன்னது தான் டிவிகேயுடைய நிலைப்பாடும், இதில் நாம் 100% உறுதியாக இருப்போம். யாருக்காகவும் எதற்காகவும் இதில் சமரசமும் கிடையாது. மதச்சார்பற்ற சமூக நீதி தன்மை தான் நமது அடிப்படை கொள்கைகள். அதில் எந்த மாற்றமும் எப்போதும் கிடையாது. இங்கே சில அரசியல் கட்சிகளும், சில அரசியல் தலைவர்களும், ஒரு சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே போதும் ஒரு பிரச்சனையும் வராது.
மாதம் மாதம் கரண்ட் பில் கட்டுகிற மாதிரி மாற்றுவோம் என்று சொன்னீர்களே செய்தீர்களா? நிறைய வீடுகளில் 100 யூனிட் தான் கரண்ட் செலவாகிறது. அந்த பில்லை அந்த மாதத்தில் கொடுத்தால் அது இலவசம் ஆகிடும், அந்த பணத்தை அவர்கள் கட்டவே தேவையில்லை. ஆனால், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பில் கொடுத்தால் அது மிகப்பெரிய சுமை தான். எந்த கணக்கில் எடுப்பது இந்த மாதிரி ஒரு மாடர்ன் கரெப்ஷன். பஸ் வசதி நிறைய கிராமங்களில் இல்லை. நிறைய மலை கிராமங்களில் மருத்துவமனை வசதி இல்லை. இது ரெண்டுமே எவ்வளவு முக்கியமான விஷயங்கள்.. பஸ் வசதியும் ஹாஸ்பிட்டல் வசதி இல்லாததால் வீட்டிலயே பிரசவம் பார்க்கிற ஆபத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு நம்பர் ஒன்னாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பெண்கள் நாங்கள் பாதுகாப்பாக இல்லை என்று சொல்கிறார்கள். இப்படி இருக்கும் போது பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டி கிடக்கிறது என்று சொன்னால் கேட்பவர்கள் எல்லாம் கேசரி சாப்பிடுகிறார்கள் என்று நினைத்தீர்களா?. சட்டம் ஒழுங்கு காணாமல் போயி ரொம்ப நாளாச்சு. நாமும் கேள்வியாக கேட்கிறோம், ஆனால் பதில் எல்லாம் வந்த மாதிரி இல்லை. இருந்தால் தானே வருவதற்கு. 5 வருசமாக பதிலே சொல்லாமல் கடந்து வந்துட்டாரு. ஆனால் இனிமேல் அப்படியெல்லாம் இருக்க முடியாது, பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/23/vijayvell-2026-02-23-17-35-10.jpg)