Advertisment

'விஜய் எப்போது வேண்டுமானாலும் ராகுலை சந்திக்கலாம்'-கே.எஸ்.அழகிரி பேட்டி

a5454

'Vijay can meet Rahul anytime' - K.S. Alagiri interview Photograph: (congress)

பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு திருட்டை கண்டித்து வேலூர் மண்டித் தெருவில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் விஜய் குறித்து மென்மையான போக்கை கடைபிடிப்பதாக எழும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,''அப்படியானால் காங்கிரஸ் விஜய்க்கு எதிரான கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? கரூர் விவகாரத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்கிறோம் என்பதற்காக எல்லாம் கூட்டணி மாறாது. இதனால் தமிழகத்தில் கூட்டணி எக்காரணம் கொண்டும் உடையாது. அந்த அளவிற்கு பலவீனமான கூட்டணி நாங்கள் இல்லை. எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி''என்றார்

Advertisment

முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு தான் ராகுல் காந்தி பேசியதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, ''செல்வப்பெருந்தகை அந்த பொருள்பட பேசவில்லை, நீங்கள் அதுபோன்று உருவாக்க வேண்டாம். எங்கள் தலைவர் ராகுல் அகில இந்திய தலைவர் அல்ல அகில உலக தலைவர். விஜய் ராகுல் காந்திக்கு நீண்ட கால நண்பர். பல நேரங்களில் சந்தித்து பேசி இருக்கிறார். விஜய் ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்றாலோ, பார்க்க வேண்டும் என்றாலோ, அவரிடம் பேச வேண்டும் என்றாலோ விஜய் யாருடைய அனுமதியையும் பெற வேண்டிய அவசியம் இல்லை. நேராக அவர் நினைக்கும் போதெல்லாம் பேசலாம். ஆக இதற்கும் அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. ஒரு பெரிய மனிதராக கரூர் சம்பவம் குறித்து இருவரிடம் ராகுல் பேசியுள்ளனார்'' என்றார்.

காங்கிரஸ் தரப்பில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என முன்வைக்கப்படுவது குறித்த கேள்விக்கு, ''இது என்னுடைய கருத்துக்கள், எங்கள் சம்மந்தப்பட்ட கருத்துக்கள் யாருக்கும் எதிரான கருத்து அல்ல. கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. ஒவ்வொரு கட்சியும் வலிமையாக வர வேண்டும் என்பதுதான் அரசியல். தேர்தலில் வெற்றி பெற 100 மதிப்பெண் வேண்டும். அது தனித்தனியாக இருந்தால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் 70 இருக்கும் போது 30 ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். எங்களுக்கு அதிகாரம் வேண்டும் என விரும்புகிறோம். அதுதவறு இல்லை. அது நேர்மையான முறையாக பேசப்படுகிறது அதுவும் தவறில்லை'' என்றார். 

ragul gandhi congress karur stampede tvk vijay KS Azhagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe