Vijay campaign - volunteers gather from early morning Photograph: (trichy)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (13.09.2025) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரத்தியேக பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டது.
திருச்சியில் இன்று காலை 10:35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்ற இருக்கும் நிலையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்தபடி உள்ளனர். அந்த பகுதியில் வரும் வாகனங்கள் பேருந்துகளில் செல்பவர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என்று கோஷமிட்டு வருகின்றனர். விஜய்யை வரவேற்பதற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை நிபந்தனைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியத்தில் கட்சியின் கொடிகள் கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் உரையாற்றிய பிறகு அங்கிருந்து அரியலூர் செல்லும் விஜய் குன்னம், பெரம்பலூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.