சர்வதேச மகளிர் தின விழா நாளை (08-03-26) கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (07-03-26) மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களுக்கு தவெக தலைவர் விஜய், சால்வை அணிவித்து புத்தகங்கள் பரிசாக கொடுத்து கை கடிகாரங்கள் அணிவித்து கெளரவித்தார்.
இந்த விழாவில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். அதாவது வெற்றிப் பயணம் திட்டத்தின் மூலம் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம் மூலம் பெண்களின் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா நிதி, காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் மூலம் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.15,000 நிதி, அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுக்கு கட்டணமின்றி 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய விஜய், “ஸ்டாலின் சார் செய்ய முடியாததை நீ எப்படி செய்வாய் என்று நீங்கள் கேட்கலாம். நம் மாநிலத்துக்கான மொத்த பட்ஜெட் 4.39 லட்ச கோடிகள். அதில் 30% ஸ்டாலின் சார் டாக்ஸுக்கு போகிறது என்பதை இப்போது ரீசண்டாக தெரிந்துகொண்டேன். அந்த பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படும் நிதியில் 20% ஸ்டாலின் சாருக்கும், 10% அவருடைய அமைச்சர்களுக்கும் போகிறது, மொத்தமாக 30%. கவர்மெண்டுக்கு தான் வரி கொடுப்பார்கள், ஆனால் கவர்மெண்டே ஒருத்தவங்களுக்கு வரி கொடுக்கிறதென்றால் அதற்கு பேர் ஸ்டாலின் சார் டாக்ஸ் தானே.
இதைவிட நாகரிகமா நீங்கள் அடிக்கிற கொள்ளையும் நீங்கள் அடிக்கிற ஊழலையும் சொல்ல முடியாது. மக்களுக்காக ஒதுக்கிற பணத்தை நீங்கஅப்படியே சைடுல ஒதுக்காம மொத்த பணத்தையும் மக்களுக்கே செலவு பண்ணிட்டா ஒரு சூப்பரான நல்ல அரசாங்க கொடுக்கலாம். கவர்மெண்ட்டில் காசு இல்ல, காசு இல்ல, காசு இல்ல அப்படி என்று சொல்றாங்க. ஆனா விடிய காத்தால எல்லார் அக்கவண்ட்டிலும் ரூ.5000 போடுறீங்களே அது எப்படி? 2000 போடுறீங்க, 3000 போடுறீங்க, 4000 போடுறீங்க இதெல்லாம் எப்படி? கவர்மெண்ட்டில் காசு இருக்கிறது, ஆனால் பற்றாக்குறை தான் காரணம். அந்த பற்றாக்குறைக்கு காரணம் என்னவென்றால் இந்த மாதிரி ஸ்டாலின் சார் டாக்ஸ். இதை முதலில் ஒழித்தாலே போதும் எல்லாமே தன்னால் நல்லாவே நடக்கும். அப்புறம் ரீசன்டா இருக்கிற நிறைய பிரச்சனைகளில் சில பிரச்சனைகள் எல்லாம் ஓடிட்டு இருக்கு. அதற்கு நீங்கள் போராடி ஹர்ட் (Hurt) ஆகுவதை எல்லாம் நான் பார்க்கிறேன், அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகுது. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நாமளும் நீங்களும் சேர்ந்து மக்களுடைய பிரச்சனைகளை மட்டும் பாப்போம். அவ்வளவு எல்லாம் ஹர்ட் ஆகாதீங்க, அவ்வளவு ஒர்த் (Worth) கிடையாது கான்பிடன்டா இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மெளனம் காத்து வந்த விஜய், முதல் முறையாக இது தொடர்பாக பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/vijaydi-2026-03-07-19-05-12.jpg)