தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக பிரச்சார வாகனத்தில் சற்று நேரத்தில் பயணப்பட்டு திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு 10.30 மணிக்கு பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advertisment

விஜய் திருச்சி வந்திருப்பதை முன்னிட்டு அவரைக் காண காலை முதல் விமான நிலைய சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை மரக்கடை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டனர். பல்வேறு பகுதிகளிலும் பெண் நிர்வாகிகள் குத்தாட்டம் போட்டு தங்களது குதூகலத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

போலீஸ் கட்டுப்பாடுகளையும் தவெக அறிவுறுத்தலையும் கடந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் இருசக்கர வாகனத்தில் விமான நிலையம் நோக்கி பயணிப்பதால் திருச்சி, புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் தலையிட்டு போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். அதே போல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மரக்கடை வரும் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு பேருந்துகள் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

v3

Advertisment

முன்னதாக, சுற்றுப்பயணத்துக்கான இலச்சினையை தவெக நேற்று வெளியிட்டுள்ளது. மேலும், விஜய் தனது சமூக ஊடகப் பக்கத்தில், அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பேருந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

உங்க விஜய் நா வரேன்’’ என்கிற நமது பயணம் தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம். 13-ம் தேதி (இன்று) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, ‘மக்களிடம் செல்என்ற அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருகிறேன்என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.