Vijay arrives in Nagai - Request to cut off electricity Photograph: (tvk)
வாரத்தில் சனிக்கிழமைகளில் மட்டும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இந்த வாரம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அந்த வகையில் நாளை காலை நாகையில் வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் இருந்து புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த பகுதிகளில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அதிமாக இருக்கிறது. ஒவ்வொரு மின்னழுத்த கோபுரங்களும் 100 அடி முதல் 150 அடி உயரம் கொண்டவை. இதில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பிகள் செல்கிறது.
கூட்ட நெரிசல் காரணமாக மின்கம்பங்களில் ரசிகர்கள் ஏற வாய்ப்பு இருக்கிறது. காரணம் திருச்சிக்கு விஜய் வந்தபோது ரசிகர்கள் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது ஏறினர். எனவே அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அந்த பகுதியில் செல்லக்கூடிய மின்சாரத்தை நாளை ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சுகுமார் மின்சார பொறியாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றைக் கொடுத்துள்ளார். மின்துறை அந்த கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us