Advertisment

திருமண விழாவிற்கு ஜோடியாக வந்த விஜய் - திரிஷா!

vjtrisha

Vijay and Trisha arrived and left for the wedding ceremony in the same car

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

கடந்த 1998ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய்க்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்து கொண்ட சங்கீதா, சில ஆண்டுகளாகவே பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சினிமா தயாரிப்பாளரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இந்த திருமண விழாவிற்கு விஜய்யும், திரிஷாவும்  ஒரே காரில் வந்திருங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

trisha tvk vijay vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe