நெல்லை மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணத்தக் கைப்பற்றியது. அங்கே சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.

Advertisment

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான மண்டல தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் அலுவலகம் பாளைங்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. அதன் துணை இயக்குநர் சரவணபாபு. அந்த மாவட்டங்களில் நடைபெறுகிற தீயணைப்பு நிலைய பணிகள், தீயணைப்புத்துறையின் அனுமதிகள், பெரிய கட்டடங்கள், மற்றும் நிறுவனங்களுக்கான தீயணைப்புதுறையின் தடையில்லா சான்றுகள் வழங்குவதற்கான ஆய்வுப் பணிகள் உள்ளிட்டவைகளை மேற்கொண்டிருக்கும் அலுவலகம் அது.

Advertisment

thee1

நான்கு மாவட்டங்களிலும் அதற்கான வசூல் நடக்கிறது என்ற தகவலின் அடிப்படையில், நவம்பர் 18 அன்று மதியம் நெல்லை லஞ்ச ஒழிப்பு துறையின் ஏ.டி.எஸ்.பி. எஸ்கால் தலைமையிலான போலீசார் அந்த அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்தனர். போலீசாரைக் கண்டதும் அலவலகத்திலிருந்தவங்களுக்கு அதிர்ச்சி, பதைபதைப்பு. பீதியான அங்கிருந்த தீயணைப்பு வீரரும் டிரைவருமான செந்தில்குமார் என்பவர் தன்னிடமிருந்த பணத்தை வெளிய வீசிருக்கார். அவர் வீசிய 27 ஆயிரத்து 400 ரூபாயை சேகரித்த லஞ்சம் ஒழிப்பு போலீசார், அவரை தங்கள் வசம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த அலுவலகத்தின் துணை இயக்குநர் அன்றைக்கு பணி நிமித்தமாக வேறொரு தீயணைப்பு நிலையத்துக்குப் போயிருந்ததால், அலுவலகத்தில அவரில்லை. அவரில்லாத நிலையில் அவரோட அறையை சோதனை செய்த போது, அங்கே உள்ள கபோர்டிலிருந்த கவரில், 2 லட்சத்து 25 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 400ன்னு கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

டிரைவர் செந்தில் குமாரிடமிருந்த பணத்தப் பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர் அதற்கான கணக்கையும் முறையான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில், கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்துக்கான விபரம் குறித்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப் பணத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்பு தான், அது  எந்த வகையிலான பணம் என்று தெரியவரும்,  என்கிறார் லஞ்சம் ஒழிப்பு துறையின் ஏ.டி.எஸ்.பி. எஸ்கால்.

Advertisment

thee2

இதற்கிடைய சோதனைக்கு முந்தைய நாளின் நள்ளிரவு 12.10 மணியளவில் காக்கி பேண்ட் நீலநிற சட்டையணிந்த நபர் ஒருவர் பைக்கில் வருகிறார். அவர் கொண்டு வந்த பையிலிருந்த சில கட்டுகள் கீழே விழ அதனை எடுத்துக் கொண்டு அலுவலகக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார். 10 நிமிடங்கள் கழித்து அவர் வெளியேறிச் செல்லும் காட்சிகள், அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு வீட்டின் சி.சி.டி.வியில் பதிவானது வெளியேறி டிரெண்டிங் ஆகி நெல்லையை பரபரப்பாக்கியிருக்கிறது. அந்த மர்ம யார்? நள்ளிரவில் அவர் அலுவலகம் சென்ற தன் நோக்கமென்ன?. அலுவலகத்தின் சாவி அவரிடம் தானிருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரமாகியிருக்கிறது. தென்மண்டல தீயணைப்புத்துறையில் கட்டுக்கட்டாக பணம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய விவகாரம் தான் பரபரப்பும், பிரச்சினையுமாய் தீயணைப்புத் துறையை உலுக்கிக் கொண்டிருக்கிறது.