அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு  வழக்கை சிபிஐ கையில் எடுத்திருக்கிறது.

Advertisment

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் கடந்த 17 ஆம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக கடந்த 18 ஆம் தேதி குடும்ப உறுப்பினர்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிவாரணத் தொகை 20 லட்சம் ரூபாய் இணையப் பரிவர்த்தனை மூலம் செலுத்தப்பட்டது. பின்னர் விஜய் வெளியிட்டிருந்த அறிவிப்பில் விரைவில் உங்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்தநிலையில் கரூர் செல்வதாக இருந்த விஜய்யின் திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கரூர் செல்வதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னையில் உள்ள பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சம்பவம் நிகழ்ந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் இருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கான சரியான இடம் கிடைக்காததாலும், மேலும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாலும் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வர வைத்து சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.