Vice Presidential Election; Will India Alliance announce a candidate from Tamil Nadu? Photograph: (India alliance)
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பாஜக நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் கோயம்புத்தூர் எம்பியாக இருந்தவர். தற்போது மஹாராஷ்டிராவின் ஆளுநராகப் பொறுப்பில் உள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/18/a4915-2025-08-18-17-03-12.jpg)
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் யாரை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் திமுகவின் திருச்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இது பற்றி எனக்குத் தெரியாது. தலைவர்களே அது குறித்து முடிவு செய்வார்கள்'' என தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.