தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் வைப் வித் எம்கேஎஸ் (VibeWithMKS) என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட் விரைவில் வெளிவரவிருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

Advertisment

முதல் எபிசோடில், உலக அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகளைப் படைத்தத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடியிருந்தார். அந்த காணொளி வெளியாகி இந்திய அளவில் சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆனது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும் கூட அந்தக் காணொளியைப் பகிர்ந்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில், வைப் வித் எம்கேஎஸ் (VibeWithMKS) நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடுக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் ஆண்டனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்துரையாடியிருக்கின்றனர். முழு காணொளி விரைவில் வெளியாகவுள்ளது.