Advertisment

நோபல் பரிசை வாங்க சென்றால் நடவடிக்கை பாயும்: மரியா கொரினா மச்சாடோவுக்கு எச்சரிக்கை!

4

இந்த ஆண்டின் நோபல் பரிசு நார்வே நாட்டின் அஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ ஆவார். வெனிசுலாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர் ஆவார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர். இவர் கடந்த 1967ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகாஸ் என்ற நகரில் பிறந்தவர் ஆவார்.

Advertisment

முன்னதாக, தனக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். எனவே, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. பல நாடுகளில் போர் ஏற்படும் என்ற நிலைப்பாட்டை மாற்றியுள்ளேன். போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அதிபர் டிரம்ப்க்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோவுக்கு தற்போது விருதை வாங்க சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு, அதனை வழங்கும் விழா நார்வே நாட்டில் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த விழாவில் மரியா கொரினா மச்சாடோ சென்றால், நடவடிக்கை எடுக்க வெனிசுலா அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மரியா கொரினா மீது சதி, பங்கராவாதம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அவ்வாறு வெளியே சென்றால் தப்பியோடியதாக கருதப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

nobel prize VENISULA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe