தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கடந்த 27.09.2025 அன்று  கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று விஜய் தரப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு ஐந்தாவது நாளான இன்று தற்பொழுது கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் மெல்ல மீண்டு வருகிறது. ஐந்து நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு அந்த பகுதியில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகளுக்கு முன்பாக தவெக கட்சி துண்டுகளும் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் காலணிகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல சில கடைகளின் வாசல்களில் கிடந்த தவெக கட்சியின் துண்டுகள் மற்றும் காலணிகளை கடையின் உரிமையாளர்களே அகற்றி சாலை ஓரத்தில் குவித்து விட்டு கடையைத் திறந்துள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் என்பது குறைந்தே காணப்படுகிறது.

Advertisment