Advertisment

“தேர்தல் தில்லுமுல்லு.. மோடியும், அமித்ஷாவும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்..” - வேல்முருகன்

4

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சிகள் இணையும் விழா தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுக் கட்சியினர சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சால்வை அணிவித்து கட்சியின் தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “24 மணி நேரமும் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிந்திப்பது எப்படி மற்ற மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் விலைக்கு வாங்குவது, கூண்டோடு கட்சி மாற்றுவது, ஆளுநர்களை வைத்து முதலமைச்சர்களை மிரட்டுவது, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றைக் கொண்டு எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை மிரட்டி கவிழ்ப்பது, ஜனநாயகத்தை அழிப்பது என்பதுதான்.தேர்தல் ஆணையத்தில் தங்கள் கட்சி ஆதரவாளர்களையும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்களையும் நியமனம் செய்கின்றனர். தகவல் உரிமைச் சட்டத்தைப் பலவீனப்படுத்துகின்றனர். தேர்தல் தில்லுமுல்லுகளையும் இப்போது திட்டமிடத் தொடங்கியுள்ளனர்.

Advertisment

நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று சிந்திப்பதே இல்லை. படித்த 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரவில்லை. தமிழகத்திற்கு ஒரு ரயில் திட்டம் கூட அறிவிக்கவில்லை. கல்விக்கான நிதி ஒதுக்கவில்லை. முழுக்க முழுக்க தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத, தமிழ் மொழி-பண்பாடு-கலாசார விரோத அரசாக ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது.கீழடி அகழாய்வைத் தொடர்வதற்கு ஒன்றிய அரசு தடை விதித்தது, இயக்குநரை மாற்றியது, நிதியை நிறுத்தியது. ஆனால் தமிழ்நாடு அரசு சொந்த நிதி ஒதுக்கி தொடர்ந்து அகழாய்வு செய்து வருகிறது. இதன் மூலமே பாஜக அரசு தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் எதிரானது என்பது தெளிவாகிறது.விமான நிலையங்களில் தமிழில் பெயர்ப் பலகையோ அறிவிப்போ இல்லை. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழில் பெயர்ப் பலகை உள்ளது; ஆனால் இந்தியாவில் இல்லை. தமிழையும் தமிழர்களையும் அழிக்க வேண்டும் என்பதுதான் ஒன்றிய பாஜக அரசின் சதி” என்று சாடினார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, “இந்த நிமிடம் வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்தான் நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிப்போம்.இம்முறை தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு உரிய இடங்களை ஒதுக்க வேண்டிய பொறுப்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இருக்கிறார். அவர் நிச்சயம் நியாயமாக நடந்துகொள்வார், எங்களுக்கு உரிய இடங்களைத் தருவார் என்று முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

SIR குறித்த கேள்வி பதிலளித்த அவர், “மோடி அரசு இப்போது கொண்டு வரும் SIR என்கிற பெயரில் நடப்பது ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம்தான்.முன்பு இந்தியைத் திணித்தபோது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தோம். அதை முறியடித்தோம். இப்போது இந்தியை நேரடியாகத் திணிக்க முடியவில்லை... இந்திக்காரர்களையே திணிப்போம் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்.‘இதை இப்போது எப்படி எதிர்ப்பீர்கள்?’ என்ற ஆணவத்துடன்தான் இந்த சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இது மாநில உரிமைகளை முழுமையாக அழிக்கும் சதி” என்றார். 

tvk velmurugan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe