பத்திரிகையாளரான நான், சென்னையில் இருந்து வேலூர் புதிய பேரூந்து நிலையத்திற்கு, நவம்பர் 16ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் உறவினர் சுபநிகழ்ச்சிக்கு செல்ல அரசு பேரூந்து மூலம் வந்தடைந்தேன். இயற்கை உபாதை கழிக்க பேரூந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது அது செயல்படாமல் அடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த கடைகாரரிடம் கழிவறை எங்குள்ளது என்று கேட்டதற்கு, அடுத்த பேருந்து நிலைய நடைமேடையில் உள்ளதாக கூறினார். அங்கு சென்று கழிவறைக்குள் செல்ல முயன்ற போது கழிவறை ஊழியர் என்னை தடுத்து பத்து ரூபாய் கேட்டார்.?  நானோ சிறுநீர் கழிக்க எவ்வளவு என்று கேட்டேன். ? ‘சிறுநீரோ... பெரிய நீரோ எல்லாத்துக்கும் பத்து ரூபாய் தான் குடுத்துட்டு உள்ள போ’ என்று கனத்த குரலில் சொன்னார்.

Advertisment

என்னைப்போலவே கழிவறை செல்ல நாற்பது வயது மதிக்கதக்க பெண்ணும், ‘(யூரின்) சிறுநீர் கழிக்கவா பத்து ரூபாய்யா’ எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். நான் கேள்வி கேட்டதை பார்த்த அந்த பெண், என்னை பார்த்து, ‘பாருங்க சார் (யூரின்) சிறுநீர் போக பத்து ரூபாயாம்’ என்று எனச் சொன்னவர், ‘முதலமைச்சர் ஃப்ரி பஸ் கூட விட்டுட்டாரு, இந்த பாத்ரூம் பெயர்ல இவுங்க பத்து ரூபாய் அநியாயமா வசூல் பன்றாங்க’ என ஆற்றாமையுடன் பேசினார். அதற்கு அந்த கட்டண கழிப்பிட ஊழியரோ, ‘இந்தாம்மா இத நாங்க தான் கழுவுறோம்.! சி.எம் மா... வந்து கழுவுறாரு’ என்றார்.

Advertisment

உடனே நான் அவரிடம், ‘சிறுநீர் (யூரின்) போக பத்து ரூபாய்னு முறைகேட வசூல் பன்றீங்களே எதுக்குன்னு கேட்டா முதல்வர இழுக்கிறீங்க ... நான் அதிகாரிகளிடம் புகார் தருவேன்’ எனச் சொன்னதற்கு அந்த ஊழியர், ‘நீ எங்க வேண்டுமானாலும் புகார் கொடு.. ஒன்னும் பண்ணமுடியாது.! எல்லாம் அதிகாரிகள் முதல் அரசியல்வாதி வரைக்கும் காசு கட்டிங் போகுது, காசு பத்து ரூபா இருந்தா உள்ள போ... இல்லனா ரோட்டுல போ...’ என்றார். சரி உங்க பேர் என்ன என்று கேட்டதற்கு.?, என் பேரு சேகர் நீ எங்க போனாலும் என்ன கிழிக்க முடியாது என்றார் திமிறாக..! செல் போனில் அவரை படம்பிடித்துவிட்டு கிளம்பினோம். பத்திரிக்கை செய்தியாளன் எனச் சொன்னபிறகும் அவர் நீங்க வேண்டுமானாலும் போய் புகார் சொல் என அதட்டலாக சொல்வதில் இருந்தே இதில் உள்ள கூட்டுக்கொள்ளை நமக்கு புரிகிறது. 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட வேலூர் புதிய பேரூந்து நிலையம் கடந்த 2022ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு புதியதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. 9.25 ஏக்கர் பரப்பவில், 3187 சதுரமீட்டரில் 87 பேரூந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் படி, 53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்து. இதில் மேயர், எம்.எல்.ஏ என பலரும் இங்குள்ள கடைகளை குத்தகைக்கு விடுவதில் லட்சங்களில் லஞ்சம் கேட்டதால் ஏலம் நடக்காமல் தள்ளி தள்ளி வைக்கப்பட்டும், ஏலம் போகாமல் அப்படியே இருக்கிறது. பேருந்து நிலையத்தில் மட்டும்மல்ல மாநகராட்சி முழுவதிலும் உள்ள கழிப்பறையில் மட்டும் மாநகராட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு லட்சங்களில் கமிஷன் தரப்படுகிறது. அதனால் இந்த கழிப்பறை கொள்ளையை யாரும் கண்டுக்கொள்வதில்லை. 

Advertisment