Advertisment

“சோசியலிசமும், சமதர்மமும் தான் தோழர் நல்லகண்ணுவின் கனவு” - வீரபாண்டியன் உருக்கம்!

nallaveera'

Veerapandian says Socialism and equality are Comrade Nallakannu's dream

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று (26-02-26) மாலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

அதன் பின்னர் தோழர் நல்லகண்ணுவில் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தோழர் நல்லக்கண்ணு விரும்பியபடி அவரது நல்லுடல் அரசு மருத்துவமனைக்குகட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாழ்ந்தபோதும் நாட்டுக்காக பயன்பட்ட அந்த புரட்சி வீரரின் உடல் மறைவுக்கு பின்னும் மருத்துவ உலகின் ஆய்வுக்காக பயன்படுவது என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. தோழர் நல்லகண்ணுவை நினைவில் ஏந்தி அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்து முடிப்போம். சோசியலிசமும், சமதர்மமும் தான் அவரது கனவுகள்.  

இந்திய மண்ணில் அத்தகைய லட்சியம் ஈடேறுவதற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலும் அதிகமாக பாடுபடும். பல்வேறு முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் அவர் மீது கொண்டிருக்கிற அன்பை உணர முடிந்தது. அந்த மகத்தான சக்திகளின் கனவுகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  நிறைவேற்றும் என்று இந்த நாளில் அவர்  நினைவாக சபதம் ஏற்போம். இது ஒருமகத்தான பேரணி. தமிழ்  மக்கள் அவர் மீது கொண்டிருக்கிற அன்பை வெளிப்படுத்துகிறது. சிங்காரவேலர் இறந்த  போதும், தோழர் ஜீவா இறந்த போதும் இதே எழுச்சி அலைமோதியது. அதற்குப் பிறகு  மகத்தான தலைவர்கள் தோன்றி  மறைந்திருக்கிறார்கள். ஆனால் இதுபோல் ஒரு  கூட்டம் இல்லை. இது தமிழ் சமூகம், இடது சிந்தனை நோக்கி நாளுக்கு நாள் நகரம்  என்பதனுடைய அறிகுறி என்றுதான் நாங்கள்  நம்புகிறோம்” என்று கூறினார். 

Veerapandian R. Nallakannu nallakannu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe