விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், “சீமானும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னையும், விஜய்யையும் பா.ஜ.க. பெற்றெடுத்த போது தொல். திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விசிக மாநில செய்தி தொடர்பாளர் கு.கா. பாவலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம் சீமானுக்கு, தொல். திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார். ஆனால் அவர் பாஜகவின் தத்துவப் பிள்ளையாக பிறப்பெடுபார் என்று யாருக்குத் தெரியும்?. 2004 இல் இந்துத்துவ பண்பாட்டு திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை சேலத்தில் நடத்தினோம். அந்த மாநாட்டு மலரை சென்னை ஜெர்மன் அரங்கில் வெளியிட்டோம். அதில் தென்கச்சி கோ. சுவாமிநாதனும், மறைந்த வலம்புரி ஜானும் கலந்து கொண்டு மாநாட்டு மலரை பெற்றுக் கொள்வதாக இருந்தது. ஆனால், வலம்புரி ஜான் வரவில்லை.
அந்நிகழ்ச்சிக்கு எனக்கு அறிமுகமாகி என்னோடு நட்பில் இருந்த சீமானை வருமாறு அழைத்திருந்தேன். ஒரு பார்வையாளராக கீழே உட்கார்ந்திருந்தார். வலம்புரி ஜான் வராத காரணத்தினால், இன்னொரு விருந்தினர் வரவில்லையே என்ன செய்யலாம் என்று தொல். திருமாவளவன் என்னிடம் கேட்டபோது, கீழே உட்கார்ந்திருந்த சீமான் கையை காட்டினேன். அவர் எனது நண்பர் திரைப்பட இயக்குனர் என்று சொன்னேன். அவரை மேடைக்கு அழைத்து வரவா என்று கேட்டேன். அதற்கு தொல். திருமாவளவன் அழைத்து வாருங்கள் என்றார். அவ்வாறு என்னால் முதன் முதலில் ஒரு அரசியல் மேடைக்கு அழைத்து வரப்பட்டு தொல். திருமாவளவன் உடன் அறிமுகப்படுத்தி அருகில் உட்கார வைத்தேன். என்ன படம் இயக்கி இருக்கிறீர்கள் என்று தொல். திருமாவளவன் கேட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/27/thiruma-pm-2025-12-27-22-27-21.jpg)
பாஞ்சாலங்குறிச்சி & பசும்பொன் ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறேன் என்று சீமான் சொன்னார். அதற்கு முன்பு காவிரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில், சென்னை பாம்குரோவ் விடுதியில் நடைபெற்ற திரைப்பட இயக்குனர்கள் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அக்கூட்டத்தில் நான் சொன்ன கருத்துகளுக்காக மறைந்த இயக்குனரும் & நடிகருமான . மணிவண்ணன் என்னை பாராட்டி பேசிக் கொண்டிருந்த போது தான், இவர் பெயர் சீமான் திரைப்பட இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார்.
அப்போது சீமான் அன்றைக்கு சொன்ன வார்த்தை இன்றைக்கும் என் நினைவில் நிற்கிறது. எனக்கு இரண்டு அண்ணன்களை பிடிக்கும் ஒன்று அண்ணன் திருமாவளவன் இன்னொன்று அண்ணன் பிரபாகரன் என்று சொன்னார். ஆகவே அவர்மீது எனக்கு மதிப்பு உண்டாகி அவருக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்தது. அவ்வப்போது அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளேன். அதன் அடிப்படையில்தான் அவரை தொல். திருமாவளவனுக்கு அந்த மேடையில் அறிமுகப்படுத்தினேன். முதல் முறையாக ஒரு அரசியல் மேடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேடையில் அன்றைக்கு பேசினார். அந்த மேடையில் தந்தை பெரியாருக்கு வெகுவாக புகழாரம் சூட்டினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் தீவிரமாக தந்தை பெரியாரை முன்னெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/27/seeman-2025-12-27-22-27-40.jpg)
அதன் பிறகு எமது கட்சியின் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எங்களோடு பயணம் செய்தார். பாப்பாபட்டி &: கீரிப்பட்டி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் கலந்து கொண்டார். அவரே பலமுறை நான் திருமாவளவனிடம் அரசியல் கற்றுக் கொண்டேன். அவர்தான் எனது அரசியல் ஆசான் என்றெல்லாம் பேசி இருக்கின்றார். அதன் பிறகு நடிகர்களும் இயக்குனர்களும் இணைந்து ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தின் போது,சீமான் கலைஞரை மிக மோசமாக விமர்சனம் பண்ணி பேசியதால், அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.
திரைப்பட பின்புலத்திலிருந்து அவர் வந்ததால், அவரது கைதை ஊடகங்கள் ஊதிப் பெருக்கின. அவர் ஊடக வெளிச்சத்திற்குள் வந்தார். அந்த விளம்பரமே அவரை தனியாக கட்சியை தொடங்க வைத்தது. ஆக அரசியல் களத்தில் முதன் முதலில் தொல். திருமாவளவன் தான் சீமானை மேடை ஏற்றி பிரசவம் பார்த்தார். என்பதிலேயே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சீமான் அவர்கள் பாஜகவின் தத்துவப் பிள்ளையாக பிறபெடுப்பார் என்பது யாருக்குத் தெரியும்?” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/vck-pavalan-2025-12-27-22-25-47.jpg)