புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள மழம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தம் (வயது 42).  இவர் தனது நிலத்தை பட்டா மாறுதல் செய்ய பேராம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஜான்அருளப்பனிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டு அதற்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளார். ஆனால் பட்டா மாறுதல் செய்ய ரூ. 6000 பணம் வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறிய நிலையில் சரியான ஆவணங்கள் இருந்தும் பட்டா பெயர் மாற்ற லஞ்சம் கேட்கிறார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை என்ற அருளானந்தம் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார் கொடுத்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து அருளானந்தம் கொடுத்த புகார் குறித்து விசாரித்து ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலிசார் லஞ்ச அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுத்து அருளானந்தத்திடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இன்று (27.12.2025 - சனிக்கிழமை) பேராம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்ற அருளானந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜான் அருளப்பன் அங்கு இல்லை. அதனால் ஜான் அருளப்பனை தொடர்பு கொண்டு  கேட்டப்போது அவர் கூறிய இடத்தில் வந்து பணத்தை தர சொல்லியுள்ளார. அதன்படி அவர் கூறிய இடத்திற்கு சென்ற அருளானந்தம் நீங்கள் கேட்ட பணம் ரூ.6000 இருக்கு எனக்கு பட்டா மாறுதல் செய்து கொடுங்கள் என்று சொல்ல லஞ்சப் பணத்தை வாங்கி தனது பேண்டின் பின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திங்கள் கிழமை பட்டா பெயர் மாறிடும் என்று கூறியுள்ளார். பணம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பீட்டர், ஜவகர் மற்றும் அவர்களது குழுவினர் கிராம நிர்வாக அலுவலரிடம் நாங்கள் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலிசார் வந்துள்ளோம் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்து  லஞ்சம் வாங்கிய பணத்தோடு மலம்பட்டி சாலையில் ஓடத் தொடங்கிவிட்டார். 

Advertisment

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஜான் அருளப்பன் தப்பி ஓடியதைப் பார்த்த லஞ்ச ஒழிப்பு போலிசாரும் பின்னாலேயே ஒரு கி.மீ தூரம் ஓடி லஞ்ச அதிகாரியை பிடித்த போது தான் லஞ்சம் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை தூக்கி வீசியுள்ளார். ஆனால் லஞ்ச பணத்தில் தடவப்பட்டிருந்த ரசாயனத்தின் வண்ணம் கிராம நிர்வாக அலுவலர் ஜான் அருளப்பன் கையில் படிந்திருந்தது. விரட்டி பிடித்து வந்து கிராம நிர்வாக அலுவலக அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்டதால் விசாரணை முடிவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கபடுவார். கைதை தொடர்ந்து சில நாட்களில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்கின்றனர்.

arrest

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீப காலமாக லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் பிடித்துக் கொடுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரை சாதாரன அலுவலர்களே சிக்கியுள்ளனர் பெரும் லஞ்ச முதலைகளுக்கு யார் தூண்டில் போடுவார்களோ என்ற அச்சம் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளிடம் எழுந்துள்ளது.

Advertisment