தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெரும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கு டெல்லியில் பா.ஜ.க மேலிடம் முயற்சி செய்கின்றனர் என்று பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது விஜய் அமித்ஷா சந்திப்பு நிகழுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யார் யாரை எப்போது பார்க்க வேண்டும் என்பதை டெல்லிகாரர்கள் சரியாக செய்துவிடுவார்கள்” என்று கூறினார்.
அதற்கு செய்தியாளர்கள், ஓபிஎஸ் கூட அமித்ஷாவை சந்தித்திருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “உங்களுக்கு எல்லாம் தெரியுதுல. ஒரு மாதம் பொறுங்கள், இதை விட மிக பிரமாண்டமான கூட்டணியை நாங்க கொண்டு வருகிறோம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மும்முனை போட்டி என்பதை நாம் கடந்த காலங்களில் பார்த்தோம். அந்த மூன்றாவது அணி, யாருடைய வாக்குகளை அவர் பிரிக்கிறார்கள்? என்பது தான் பார்க்கப்படும். இரண்டு கூட்டணி இல்லாமல் மூன்றாவது கூட்டணிக்கு கொஞ்சம் வாக்குகள் எப்போதும் போயிட்டு தான் இருக்கும். ஆனால், அது எப்போதும் வெற்றி பெற்றது கிடையாது. தேர்தல் நெருங்க நெருங்க யாரை அனுப்ப வேண்டும் என்று மக்கள் தெளிவாக இருப்பார்கள்.
திமுக வாக்குகள் பிரியாது என்று யார் சொன்னது? இந்த தடவை திமுக கட்சிகாரர்களே இவர்கள் எப்போது வீட்டுக்கு போவார்கல் என்று கேட்டுகொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அராஜகம் நடக்கிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/vaanathi-2025-12-03-18-16-45.jpg)